Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போண்டா பிரச்சினை.. வேலூரில் வாயை விட்ட மாமியார்.. ஒரு நிமிடத்தில் உணர்ச்சிகரமான முடிவெடுத்த மருமகள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே போண்டா பிரச்சினையில் மாமியார் கிரிஜா திட்டினாராம் . இதனால் மனமுடைந்த மருமகள் ஆஷா, ஆசிட் குடித்து உயிரையே மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் ஒடுக்கத்தூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வாய் விட்ட மாமியாரால்... ஒரு நிமிடத்தில் உணர்ச்சிகரமான முடிவெடுத்த மருமகள் உயிரையே விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

மாமியார் மருமகள் பிரச்சனை என்பது கன்னித்தீவு தொடர்கதை போல் முடிவு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட பிரச்சனையாக உள்ளது. சிறு சிறு விஷயங்களுக்கு நோகடிக்கும் வகையில் மாமியார்கள் பேசுவதும்.. அதனால் கோபப்பட்டு மருமகள் உணர்ச்சிகரமான முடிவுகளை எடுப்பதும் பல வீடுகளில் நடக்கிறது. இதேபோல் சில வீடுகளில் மருமகள் வந்த உடனே மொத்தமாக வீட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மாமியாரை சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் நோகடிக்கும் வகையில் பேசுவதும்.. இதனால் அவர்கள் உணர்ச்சிகரமான முடிவு எடுப்பதும் நடக்கிறது.

vellore crime

இதில் பெரும்பாலும் மாமியார் கொடுமைகள் தான் அதிகமாக நடக்கிறது.. மாமியார்கள் தனது மகன் சம்பாத்தியத்தில் வாழும் நீ இப்படி எல்லாம் செலவு செய்யலாமா.. இப்படி எல்லாம் உடை அணியலாமா.. இப்படி எல்லாம் என் மகன் பணத்தை வீணடிக்கலாமா என்று கேள்வி எழுப்பி மருமகள்களை நோகடிப்பது தொடர்கிறது.. அப்படிப்பட்ட ஒரு கேள்வியும். அதற்கு மருமகள் எடுத்த உணர்ச்சிகரமான முடிவும்... இரண்டு குழந்தைகளை தாயில்லாமல் தவிக்க வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த 33 வயதாகும் மணிகண்டன் என்பவர் பெங்களூரில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கும் அணைக்கட்டு அருகே உள்ள ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சின்னப்பனின் மகள் ஆஷாவுக்கும் (25) கடந்த 6 வருடத்திற்கு முன்பு கல்யாணம் நடந்தது. மணிகண்டன் ஆயிஷா தம்பதிக்கு 5 வயது மற்றும் 3 வயதில் மகன்கள் உள்ளனர்.

மணிகண்டன் பெங்களூரில் வேலை செய்து வருவதால், மாதம் ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம் ஆகும். இதனிடையே வரதலம்பட்டு கிராமத்தில் உள்ள அவர்களின் வீட்டில் ஆஷாவுக்கும் அவரது மாமியார் கிரிஜாவுக்கும் இடையே சண்டை நடக்குமாம். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ஆஷா தனது வீட்டில் போண்டா தயாரித்து அதனை அலமாரி மேல் வைத்திருந்தாராம். அதனை நேற்று அவரின் இளையமகன் பார்த்து தனக்கு தருமாறு கேட்டு அடம்பிடித்தான். உடனே அவற்றை ஆஷா குழந்தைகளுக்கு எடுத்து கொடுத்தாராம்.

அப்போது இதனை பார்த்த மாமியார் கிரிஜா, என் மகன் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணத்தை இப்படி வீண் செய்வதா? என கேட்டதால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாம். தன்னை இப்படி மாமியார் கேட்டுவிட்டாரே என்று நினைத்த ஆயிஷா வேதனை அடைந்து வீட்டின் கழிவறையில் இருந்த ஆசீட்டை எடுத்து குடித்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் மாமனார் வரதராஜ் உடனே மருமகள் ஆஷாவை மீட்டு தனது இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றார்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆயிஷா உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஆஷாவுக்கு திருமணமாகி 6 வருடங்களே ஆவதால் அது குறித்து முழு விசாரணைக்கு வேலூர் கோட்டாட்சியரும் விசாரிக்க உள்ளார். போண்டா செய்ததை மாமியார் கண்டித்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+