மோசமான அதிகாரிகளை பட்டையை உரிக்கப் போறேன்! எங்கிருந்து தான் வந்தார்களோ? டென்ஷன் ஆன துரைமுருகன்!
வேலூர்: வேலூர் மாநகராட்சிக்கு எங்கிருந்து தான் அதிகாரிகள் வந்தார்களோ தெரியவில்லை, மோசமாக செயல்படுகிறார்கள் என மூத்த அமைச்சரான துரைமுருகன் நொந்து போய் பேசியிருக்கிறார்.
எந்த சாலையை பார்த்தாலும் பள்ளமும் மேடுமாக இருக்கிறது என்று கூறிய துரைமுருகன், அதனை அதிகாரிகள் சரிவர கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார். முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒரு அமைச்சர், ஆளுங்கட்சியின் பொதுச்செயலாளர் என்ற உயர்ந்த பதவிகளில் இருக்கும் துரைமுருகனையே கடைசியில் இப்படி மேடையில் பேச வைத்துவிட்டார்கள் அதிகாரிகள்.

இதனிடயே செயல்படாத அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஒரு பயனும் இல்லை என்பதை கூறிய அமைச்சர் துரைமுருகன், மோசமான அதிகாரிகளை பட்டையை உரிக்கப் போறேன் என மேடையிலேயே எச்சரிக்கும் டோனில் பேசினார். இன்று வேலூர் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து டோஸ் விடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
துரைமுருகனின் கோபத்துக்கு காரணம், வேலூரிலும் சரி, காட்பாடியிலும் சரி சாலைகள் மோசமாக இருப்பதேயாகும். மழைக்காலம் வேறு வரவுள்ளதால் நிலைமை இன்னும் மோசமாகும். அதற்குள் நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிடும். இதனால் மக்களின் கோபம் எம்.பி. தேர்தலில் எதிரொலித்து கதிர் ஆனந்துக்கு அது சேதாரத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார் துரைமுருகன்.
இதனிடையே அமைச்சர் துரைமுருகன் தங்களிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப் போகிறாரோ என வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எந்தெந்த அதிகாரிகள் மந்த கதியில் செயல்படுகிறார்கள் என்ற லிஸ்டை கவுன்சிலர்கள் அமைச்சர் வசம் கொடுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications