சிக்கியது கை துப்பாக்கி.. லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கிய ஆவின் மேலாளர் வீட்டில் பரபரப்பு
வேலூர் : ஆவின் ஒப்பந்த ஊழியரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கி கையும்களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கிய வேலூர் ஆவின் உதவி பொது மேலாளர் வீட்டில் இருந்து ஒரு கை துப்பாக்கி, 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றியும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், இவர் வேலூர் ஆவின் நிருவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பிவைப்பவர். ஆவினில் இவர் ஒப்பந்த அடிப்படையில் அனுப்பிய ஆட்களுக்கான ஊதிய நிலுவை தொகை இருந்துள்ளது.
நிலுவை தொகை 5 லட்சத்தி 23 ஆயிரத்தை வழங்க கோரி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தின் உதவி பொது மேலாளராக பணியாற்றி வரும் மகேந்திரமால் (57) என்பவரிடம் பலமுறை கேட்டு வந்துள்ளார் ஜெயசந்திரன்.

லஞ்சம்
பல நாட்களாக தாமதப்படுத்திய நிலையில், 5 லட்சத்தி 23 ஆயிரத்துக்கான நிலுவை தொகை காசோலையை வழங்க உதவி பொது மேலாளர் மகேந்திரமால் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெயச்சந்திரன் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.

ஒப்பந்ததாரர்
புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயச்சந்திரனிடம் கொடுத்தனுப்பியுள்ளனர். இதனையடுத்து ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் ஆவின் உதவி பொது மேலாளர் மகேந்திரமாலிடம் காசோலையை அனுமதிக்க ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

சிக்கினார்
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரஜினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் மகேந்திரமாலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்சமாக பெற்ற 5 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

கள்ளத்துப்பாக்கி
மேலும் மகேந்திரமால் வசித்து வரும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தென்றல் நகரில் உள்ள வீட்டை சோதனை செய்த போது உரிமம் இல்லாத பழைய நாட்டு கைதுப்பாக்கி மற்றும் 6 பெரிய தோட்டாக்கள், 2 சிறிய தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மகேந்திரமாலிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை 11.00.மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9.30.மணி வரை நீடித்தது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
கைமாறிய 12 வருட மனைவி.. குஜராத் கணவர் தந்த புகாரில் செம ட்விஸ்ட்.. அலறியடித்து ஓடிய 10 பேர் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications