ராணிப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி டிஸ்மிஸ்.. கலெக்டர் உத்தரவின் பின்னணி
வேலூர்: ராணிப்பேட்டை அருகே நிதி முறைகேடு தொடர்பாக நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி என்பவரை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டிருக்கிறார். சட்டப்படியான தனது கடமைகளிலிருந்து தவறியதாலும், ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாலும், அதிகார வரம்பை மீறி செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்து ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறுகையில், "ராணிப்பேட்டை மாவட்டம் நல்லாக் ஊராட்சியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரையிலான வரவு செலவு கணக்குகள் மீது உதவி இயக்குநர் (தணிக்கை) மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து 1 முதல் 10 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க கூறி ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளரும், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நல்லாக் ஊராட்சி மன்ற தலைவருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டது..

இதற்கிடையில் நவ்லாக் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் அனைவரும் நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் இந்நிலையில் மேற்படி சட்டப்பூர்வ அறிவிப்புக்கு பதிலளிக்க ஊராட்சி மன்ற தலைவருக்கு போதிய கால அவகாசம் வழங்கியும், விளக்கம் எதும் அளிக்கவில்லை.
இதையடுத்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (2 முதல் 10)-வரையிலான விதிமுறைகளின்படி வாலாஜாபேட்டை வட்டாட்சியர் தலைமையில் நவ்லாக் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஊராட்சி மன்றத்தின் கருத்தினை பதிவு செய்து அறிக்கை பெறப்பட்டு ஊராட்சி மன்றத்தின் கருத்தினையும், குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியரால் தன்னிச்சையாக பரிசீலனை செய்ததில், நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபணமானது.
இதையடுத்து சட்டப்படியான தனது கடமைகளிலிருந்து தவறியதாலும், ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாலும், அதிகார வரம்பை மீறி செயல்பட்டதால் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக இருந்ததால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (11)-ன் படி மாவட்ட ஆட்சியர் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி நிதி முறைகேடு தொடர்பாக அப்பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா உத்தரவிட்டார்..
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications