நீ இல்லைனா செத்துருவேன்! கள்ளகாதலிக்காக கழுத்தில் கயிறோடு லைவ்வில் மிரட்டிய ‘கச்சேரி பாடகர்’! ஷாக்!
வேலூர் : வேலூர் அருகே தன்னுடன் பேசாமல் இருந்த கள்ளக்காதலியை மிரட்டுவதற்காக தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற இசைக்கச்சேரி பாடகர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,இதுகுறித்த பதைபதைக்க வைக்கும் தற்கொலை வீடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த இடையகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜா இசை கச்சேரி குழு வைத்து நடத்தி வந்துள்ளார்.
ராஜாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேரி என்பவருடன் திருமணமாகி 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளது.

கள்ளத்தொடர்பு
இந்நிலையில். இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுடன் ராஜாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மனைவி மேரிக்கு தெரியாமல் அந்தப் பெண்ணுடன் பொன்னை பகுதியிலேயே வீட்டிற்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இதன் காரணமாக மேரிக்கும் ராஜாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

குடும்ப தகராறு
அதே நேரத்தில் சித்ரா வேறு சில ஆண்களுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளார். இந்த தகவல் ராஜாவுக்கு தெரிய வந்ததையடுத்து அடுத்து கள்ளத்தொடர்பில் இருந்த சித்ராவுக்கும், ராஜாவுக்கும் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சித்ரா கடந்த சில நாட்களாக ராஜாவுடன் பேசாமல் இருந்ததோடு, செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். பலமுறை முயன்றும் அவருடன் பேச முடியாததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை மிரட்டல்
இதனால் சித்ராவை பயமுறுத்துவதற்காக, அறையில் படுத்திருந்த சித்ராவை மிரட்டிவிட்டு பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியில் இவர்கள் தங்கியுள்ள வீட்டின் ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதற்காக முயன்றுள்ளார். இதனை செல்போன் மூலம் வீடியோவும் எடுத்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தாமதமாக பார்த்த சித்ரா அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த பொன்னை காவல் துறையினர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலுக்காக மனைவி பிள்ளைகளை விட்டு பாடகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் பதபதைக்க வைக்கும் நேரலை காட்சி வெளியாகியுள்ளது.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications