வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடப் பாவமே! 10ஆம் வகுப்பு பாஸ் ஆனது கூட தெரியாமல்.. மீண்டும் 10th படித்த மாணவர்.. எப்படி தெரியுமா

Google Oneindia Tamil News

வேலூர்: அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவர், மீண்டும் ஓராண்டு முழுக்க 10ஆம் வகுப்பு படித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதலில் பரவியது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.

அந்த ஆண்டு 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்து அனைத்து மாநில அரசுகளும் உத்தரவிட்டன.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் - ஹைகோர்ட் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் - ஹைகோர்ட்

மாணவர்கள்

மாணவர்கள்

கடந்த 2020-21 கல்வி ஆண்டிலும் கிட்டதட்ட அதே நிலை தான். மாணவர்களுக்கு அந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இறுதி தேர்வு சமயத்தில் டெல்டா கொரோனா காரணமாக 2ஆம் அலை ஏற்படவே தேர்வுகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. அப்படிதான், 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

10ஆம் வகுப்பு

10ஆம் வகுப்பு

அதன்படி கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவர், இந்த ஆண்டு மீண்டும் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பள்ளிகளில் தேர்ச்சி

பள்ளிகளில் தேர்ச்சி

கடந்த ஆண்டு கொரானா ஊரடங்கு காரணமாகத் தமிழக அரசு 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருந்தது. வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு 10ஆம் பகுப்பு படித்து, தேர்ச்சி பெற்ற மாணவன் கணேசன் தேர்ச்சி பெற்றது அவருக்குத் தெரியவில்லை. ஆசிரியர்களும் கூட இது தொடர்பாக மாணவருக்கு எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. .

அட்மிஷன்

அட்மிஷன்

இதன் காரணமா அந்த மாணவர் மீண்டும் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பிற்கு அட்மிஷன் செய்து படித்து வந்துள்ளார். அதேநேரம் அவருடன் படித்த பிற மாணவர்கள் +1 படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில். 10ஆம் வகுப்புத் தேர்வுக்கு கணேசனக்கு ஹால் டிக்கெட்டும் கூட வந்துள்ளது.

தலைமை ஆசிரியை

தலைமை ஆசிரியை

இந்த நிலையில், இப்போது தான் பள்ளியின் தலைமை ஆசிரியை, "நீ கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டதால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டாம்" எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு மாணவரும் அவரது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். அரசுப் பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவனை மீண்டும் அட்மிஷன் செய்து அதே வகுப்பு படித்துள்ளான். இச்சம்பவம் அங்குச் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
In vellore, School student again studied 10th standard: (வேலூரில் மீண்டும் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X