வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் லோக்சபா தொகுதிக்கு நாளை மறுநாள் தேர்தல்.. இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் தொகுதிக்கு வரும் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

இதையடுத்து இன்று மாலை முதல் தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதிக்கு வரும் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.

Tamilnadu: Vellore MP election campaign ends today

இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின் , அமைச்சர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதையடுத்து இன்று மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை விதித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறுகையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணி முதல் வாக்குப் பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்களையோ ஊர்வலத்தையோ நடத்தக் கூடாது.

தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக் காட்சி, ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் போன்றவற்றின் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

பொதுமக்களை ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது பிற கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் தொடர்பான பிரசாரம் செய்யக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

இன்று மாலை 6 மணி முதல் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்படுகிறது.

English summary
Tamilnadu state election commission says that from today evenibng there should be no opinion poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X