சித்தாள் மகேஸ்வரிக்கு ஏகப்பட்ட "பாய் பிரண்ட்ஸ்".. கிணற்றடியில் நடந்த சம்பவம் இருக்கே.. அலறிய ஆற்காடு
: சித்தாளை கொன்று கிணற்றில் போட்ட கள்ளக்காதலர் கைதாகி உள்ளார்
ராணிப்பேட்டை: இத்தனை நாளாக காணாமல் போன மகேஸ்வரியை தேடி கொண்டிருந்த நிலையில், ஆற்காடுபோலீசார் அவரை பிணமாக கண்டெடுத்துள்ளனர்..!
பழமைவாய்ந்த நம் கலாச்சாரத்தில், காலத்திற்கேற்ப சில மாற்றங்கள், அதிலும் மேற்கத்திய கலாச்சாரம் பல தரப்பினரையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.
கண்ணியமான காதல்கள் குறைந்துபோய், கொலை செய்யும் அளவுக்கு விபரீத காதல்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. காதலுக்கு தடை போடும் பெற்றோரும் கொல்லப்படுகிறார்கள்.. கவுரவக் கொலை என்ற பெயரில் காதலர்களும் கொல்லப்படுகிறார்கள்.

ராணிப்பேட்டை
நல்ல விஷயங்களை கொண்ட சினிமாக்கள், படைப்புகள், வெளிவந்தாலும், வன்முறை, செக்ஸ் வக்கிரங்கள், கள்ளக்காதல் விஷயங்கள், சமூக ஒழுங்கீனங்களை சித்தரிக்கும் சினிமாக்களும் வந்து கொண்டுதானிருக்கின்றன.. இந்த கள்ளக்காதல்கள் பல சமயங்களில் கொடூர கொலைகளுக்கும் காரணமாகிவிடுகின்றன... இதனை கட்டுப்படுத்த எத்தனையோ சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. எனினும் அது தொடர்பான கொலைகளின் எண்ணிக்கைகள் குறையவில்லை. இதோ ராணிப்பேட்டையிலும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.

கள்ளக்காதல்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்ன குக்குந்தையைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்.. இவர் ஒரு கூலித்தொழிலாளி.. 40 வயதாகிறது.. மனைவி பெயர் மகேஸ்வரி.. 35 வயதாகிறது.. இவர் சித்தாள் வேலை செய்து வந்தார்... இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்... மகேஸ்வரி திருமணம் ஆனதில் இருந்தே பலருடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது... இந்த விஷயம் தெரிந்து, மகேஸ்வரியை கணவன் கண்டித்துள்ளார்.. புத்தி சொல்லி உள்ளார்.. தகராறு செய்துள்ளார்.. எதையுமே மகேஸ்வரி காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.

பாய் பிரண்ட்ஸ்
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறு அதிகரித்தபடியே வந்துள்ளது.. கடந்த வாரம் மகேஸ்வரி அவரது அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறிசென்றவர் மறுபடியும் வீட்டுக்கு திரும்பவில்லை.. அதனால், மனைவி மாயமானது குறித்து ஜெய்சங்கர் கடந்த 31-ந் தேதியன்று ஆற்காடு கிராமியக் போலீசில் புகார் அளித்தார்... அந்த புகாரின் பேரில் மகேஸ்வரியை போலீஸாரும் தேடிவந்தனர். இந்நிலையில்தான், அதே குக்குந்தியில் உள்ள ஒரு கிணற்றில், பெண்ணின் சடலம் மிதப்பதாக ஆற்காடு கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது...

மகேஸ்வரி சடலம்
தகவலின் பேரில் அங்கு சென்று போலீஸார் பார்த்தபோது, கிணற்றில் மிதந்தது காணாமல் போன மகேஸ்வரியின் சடலம் என்பது உறுதியானது.. அவரது சடலத்தை மீட்டனர்.. ஆனால், முகம் முழுவதும் சிதைந்து போயிருந்தது.. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் போஸ்ட் மார்ட்டத்துக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.. ஆனால், அதற்குள் கணவர் ஜெய்சங்கர் முதல் அவரது குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.. மகேஸ்வரியுடன் நெருக்கமான தொடர்பு இருந்தவர்கள் அவரைக் கொன்று கிணற்றில் போட்டுள்ளதாகவும் உடனே அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

மகேஸ்வரி
இதையடுத்து, போலீசாரும் விசாரணையை துரிதமாக ஆரம்பித்தனர்.. குக்குந்தியை சேர்ந்த 2 பேரைப் போலீஸார் பிடித்து விசாரித்ததில், மகேஸ்வரியின் கள்ளக்காதலன் பிரபு என்பவர் பெயர் அடிபட்டது.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. பிரபுவுக்கும் மகேஸ்வரிக்கும் 10 வருடமாகவே கள்ளக்காதல் இருந்துள்ளது.. ஆனாலும் மகேஸ்வரி மேலும் பலருடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது.. இதனால் ஆத்திரமடைந்த பிரபு, சம்பவத்தன்றும் கிணற்றடிக்கு வந்துள்ளார்..

கிணற்றடி
ஏன் இத்தனை பேருடன் தொடர்பில் இருக்கிறாய்? என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இது தகராறாக உருவெடுத்துள்ளது.. இதில் ஆத்திரமடைந்த பிரபு, ஒரு பெரிய கல்லை எடுத்து, மகேஸ்வரி தலையில் தூக்கி போட்டதுடன், அதே கிணற்றில் தள்ளி கொலையும் செய்ததாக கூறப்படுகிறது.. இப்போது கைதான பிரபுவிடம் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. எந்த கிணற்றடியில் இவர்களின் கள்ளக்காதல் வளர்ந்ததோ, அதே கிணற்றில் மகேஸ்வரி முகம் சிதைந்துபோய் பிணமாக மிதந்தது, காலம் தந்த தண்டனை என்றே சொல்லலாம்..!












Click it and Unblock the Notifications