வன்னியர் + தாழ்த்தப்பட்டவர்கள்= முன்னேற்றம்! தமிழகம் முன்னேற இது அவசியம்! ஐடியா கொடுக்கும் அன்புமணி!
விழுப்புரம் : தமிழகத்தில் இரு பெறும் சமூகங்களான தாழ்த்தப்பட்ட மற்றும் வன்னியர் சமூகம் பின் தங்கியுள்ளனர் எனவும், இந்த இரு சமூகங்களும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் அமைந்துள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு 144-ஆவது பிறந்தநாளையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்," முந்தைய ஆட்சியாளர்கள் 20 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்டது. தொடர் போராட்டம் காரணமாக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இருப்பினும் உயர்நீதிமன்றம் ரத்து செய்த ஏழு காரணங்களில் ஆறு காரணங்கள் தவறானது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திமுக அரசு
தீர்ப்பு வந்து ஐந்துமாதங்கள் ஆகியும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது சாதி பிரச்சனை இல்லை சமூக நீதி பிரச்சனை. தமிழகத்தில் இரு பெறும் சமூகங்களான தாழ்த்தப்பட்ட மற்றும் வன்னியர் சமூகம் பின் தங்கியுள்ளனர் இந்த இரு சமூகங்களும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும். ஸ்டாலின் அவர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ள, சட்டமன்றத்திலேயும், வெளியேயும் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

10.5 சதவீத இடஒதுக்கீடு
தொடர்ந்து பாமக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு விரைவில் சட்டம் கொண்டு வருவார்கள் என எதிர்ப்பார்கிறோம். தமிழக அரசு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உரிய தரவுகளுடன் அவசர சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோ. மின்சார கட்டண உயர்வை சிறிதளவும் ஏற்க முடியாது.

வேடிக்கை காரணம்
அமைச்சர் கூறும் காரணங்கள் வேடிக்கையான காரணங்கள், ஒன்றரை ஆண்டுக்கு முன்பு போராடிய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேறொரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். கொரோனாவுக்கு பிறகு பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டன உயர்வை ஏற்க முடியாது. மக்களுக்கு அது மிகப்பெரிய சுமையாக உள்ளது." என கூறினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications