கரைபுரண்டோடும் வெள்ளம்! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 300 ஆடுகள்! பிறகு?
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 300 ஆடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவற்றில் 100 ஆடுகளை தீயணைப்புத்துறையினர் காப்பாற்றி உள்ளனர்.
வெள்ளம் கரைபுரண்டோடுவதால் மேலும் 300 ஆடுகளின் கதி என்னவென்று தெரியவில்லை என ஆட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டையே புரட்டிப் போட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் தேக்கி வைக்கமுடியாமல் உபரீநீராக வெளியேறுகிறது. சில இடங்களில் ஏரிகள் உடைந்து போனதால் அந்த அந்த தண்ணீர் அப்படியே கிராமத்திற்குள் வருவதால் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

கூடுதல் மழை
தொடர்ந்து இரண்டு முறை வங்கக் கடலல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மண்டலமாக மாறி கரையை கடந்துள்ளது. இதனால் இயல்பைவிட 70 சதவீதம் மழை அதிகம் பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு
இதற்கிடையே அதி கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து இயல்பை விட அதிகம் வந்ததால் தளவானூர் பகுதியில் தடுப்பணை மற்றும் சுற்றுச் சுவரில் உடைப்பு ஏற்பட்டது. அதாவது தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து அப்படியே வெளியேறி வருகிறது. இதனால் ஆற்றங்கரையோர கிராமத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

500 ஆடுகளின் கதி?
இதற்கிடையே கொண்டூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் யாசகம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் தனக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இந்நிலையில் இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதில் ஆட்டுப்பட்டியில் சுமார் 300 ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

100 ஆடுகள் பலி?
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் சுமார் 200 ஆடுகளை காப்பாற்றினர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆடுகளை காப்பற்ற முடியவில்லை என தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications