வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் மகன்! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறு விறு!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார் அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் மஸ்தான்.
வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே அமைச்சரின் மகன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சராவதற்கு முன்பாக செஞ்சி பேரூராட்சி தலைவராக 5 முறை பதவி வகித்தவர் செஞ்சி மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மஸ்தான்
தமிழக அமைச்சரவையில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கக் கூடிய அமைச்சர்களில் செஞ்சி மஸ்தானும் ஒருவர். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் இவர், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார். பெரிதாக யாரிடமும் அதிர்ந்து பேசாத இவர், மிகவும் எளிய குடும்ப பின்னணியில் இருந்து படிப்படியாக முன்னேறி அமைச்சரானவர். இதனால் தன்னிடம் உதவி கேட்டு யார் வந்தாலும் சற்று தாராளம் காட்டக் கூடியவர்.

செஞ்சி பேரூராட்சி
இந்நிலையில் செஞ்சி பேரூராட்சியில் தனது மகன் மொக்தியார் மஸ்தானை வார்டு கவுன்சிலர் பதவிக்கு களமிறக்கும் திட்டத்தில் உள்ள அமைச்சர், கடந்த வாரம் அதற்கான நேர்காணலை கூட நடத்தியிருக்கிறார். அமைச்சர் மகன் தேர்தலில் போட்டியிடுவதை பெரிதாக யாரும் எதிர்க்காதது அவருக்கான பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. அமைச்சராவதற்கு முன்பாக செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவராக 5 முறை மஸ்தான் இருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.

பிரச்சாரம் தொடக்கம்
திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படாத நிலையில் செஞ்சி பேரூராட்சி 7-வது வார்டில் அமைச்சரின் மகன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டாராம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் அமைச்சர் மஸ்தான் இடம் பெற்றிருப்பதால், இதற்கு மேலிடத்தில் இருந்து எந்த சிக்கலும் வர வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

பேரூராட்சி தலைவர்
செஞ்சி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளில் வெற்றி பெறும் கட்சியே தலைவர் பதவியை பிடிக்க முடியும். அமைச்சர் தரப்பை பொறுத்தவரை 18-ல் 15 வார்டுகள் வரை திமுக உறுதியாக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிப்பதோடு மொக்தியர் மஸ்தானை பேரூராட்சி தலைவராக்கவும் காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications