ஸ்டாலின் வழி.. பெரியார் வழி! அன்று பெண்கள் ஒடுக்கப்பட்டனர் - இன்றோ.. இதான் திராவிட மாடல் - பொன்முடி
விழுப்புரம்: ஒடுக்கப்பட்ட மகளிருக்கு கல்வி உட்பட அனைத்திலும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ளது மனம்பூண்டி கிராமம். இப்பகுதியில் இன்று காலை புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், ஒன்றிய சேர்மன், அரசு அதிகாரிகள், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி திமுக அரசின் சாதனைகளையும், செயல்பாடுகளையும், திராவிட மாடல் ஆட்சியை பற்றியும் விளக்கி பேசினார். அப்போது அவர், "ஒரு காலத்தில் மகளிர் என்றாலே ஒடுக்கப்பட்டவர்கள். அப்படி ஒடுக்கப்பட்ட மகளிருக்கு படிப்பு உட்பட அனைத்திலும் இடமளிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதைத்தான் சொல்லி இருக்கிறார். தந்தை பெரியாரும் இதைத்தான் சொன்னார். ஆணும் பெண்ணும் சமம். இங்கே பாருங்கள்! இந்த ஊருக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு மகளிர் ஒன்றிய சேர்மனாகி இருக்கிறார் என்றால் அதுதான் திராவிட மாடல்.
ஊராட்சி, ஒன்றிய தலைவர் பொறுப்புகள் எல்லாவற்றிலும் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் என்றாலே ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி அனைத்திலும் இடம் பெற செய்துள்ளோம்." என்றார்.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications