பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : முன்னாள் டிஜிபி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் டிஜிபி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் டிஜிபி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான போலீசார் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி அந்தஸ்தில் இருந்த ராஜேஸ்தாஸ், பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்தார்.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். விசாகா கமிட்டியும் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் டிஜிபி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான போலீசார் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.












Click it and Unblock the Notifications