அல்லேலுயா என்பதால் என்ன பிரச்சினை? கிறிஸ்தவ பள்ளிகளால் கல்வி கிடைத்தது.. அமைச்சர் மஸ்தான் பேச்சு!
விழுப்புரம்: திருவண்ணாமலைக்கு சென்றால் அரோகரா என்கிறோம், முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்றால் அல்லாஹு அக்பர் என்கிறோம், அதேபோல் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு சென்றால் அல்லேலூயா என்கிறோம். அல்லேலூயா என்று கூறுவதால் ஒரு கூட்டத்திற்கு என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார். குறிப்பாக தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து மாநாட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படைத்தன்மை உடன் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். கடந்த 10 ஆண்டுகளை போல் அல்லாமல் தற்போது நிதிநிலை சீரடைந்து வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
வரும் காலங்களில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தரப்படும். முக்கியமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. தமிழகத்தின் நிதிநிலை சீரானதும் அனைவரது எண்ணமும் நிறைவேறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மஸ்தான்
தொடர்ந்து, மரக்காணத்தில் நடைபெற்ற சேவியர் ஜீசஸ் சர்ச்சில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் செஞ்சி மஸ்தான் பேசுகையில், அனைத்து மதங்களிலும் ஒரே கருத்து தான் போதிக்கப்படுகிறது. இந்து கோயிலுக்கு போனால் திருவண்ணாமலைக்கு சென்றால் அரோகரா என்கிறோம். முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்றால் அல்லாஹு அக்பர் என்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சி
அதேபோல் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு சென்றால் அல்லேலூயா என்கிறோம். அல்லேலூயா என்று கூறுவதால் ஒரு கூட்டத்திற்கு என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை. அனைவரும் ஒற்றுமை உணர்வோடு இருக்க வேண்டும். இந்த முன்னோட்டத்தில் தான் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது.

கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள்
அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது தான் கிறிஸ்துவ பள்ளிக் கூடங்கள். அதன்மூலம் பல்வேறு தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவை பெற்றுள்ளனர். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications