பொண்ணுக்கு வயசு 15 தான்.. பையனுக்கு 17.. கொஞ்ச நாள்தான்.. அதற்குள் நடந்த கொடுமை!
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் கைதானான்
விருதுநகர்: பொண்ணுக்கு வயசு 15தான் ஆகிறது.. பையனுக்கு வயசு 17தான் ஆகிறது.. கொஞ்சம் நாள்தான் பழகினாங்க.. அதுக்குள் அந்த சிறுமியை கர்ப்பமாகிவிட்ட கொடுமை நடந்துள்ளது.
விருதுநகர் பி.குமாரலிங்காபுரத்தை சேர்ந்தவர்தான் அந்த சிறுமி.. அதேபோல, கருப்பசாமி நகரை சேர்ந்தவர் அந்த சிறுவன்.. எதேச்சையாக சந்தித்து கொண்டனர்.. எதேச்சையாக லவ் வந்துவிட்டது.. எதேச்சையாக பழகியும் விட்டனர். எல்லாமே சில மாதங்களில் நடந்து முடிந்துவிட்டது.

இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துவிடவும், மகளை கண்டித்தனர்.. அட்வைஸ் செய்தனர்.. இந்த சமயத்தில்தான், பெண்ணை அந்த 17 வயது சிறுவன் கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
17 வயசில் பெண்ணை கடத்தினார் என்பதைவிட, விருதுநகர் கட்டையாபுரத்தில் ஒரு வீடு எடுத்து குடும்பமே நடத்தி வந்துள்ளார் என்பதுதான் அடுத்த ஷாக்! பிறகு வேலை தேடி வருவதாக சொல்லிவிட்டு, சிறுமியை வீட்டிலேயே தனியாக விட்டுவிட்டு, திருப்பூருக்கு வந்துள்ளான் சிறுவன்.
இந்த சமயத்தில்தான் அந்த பெண் கர்ப்பமாகிவிட்டார்.. திருப்பூருக்கு சென்ற சிறுவனை காணோம்.. பலமாசம் ஆகியும் ஊருக்கு திரும்பி வரவும் இல்லை.. போனிலும் பேசவில்லை... இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி திருப்பூருக்கே கிளம்பி சென்றுள்ளார்.. அங்கு சிறுவனையும் தேடி கண்டுபிடித்துவிட்டார்.. தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன், கெட்ட கெட்ட வார்த்தையில் சிறுமியை திட்ட ஆரம்பித்துவிட்டாராம்.. அத்துடன் கர்ப்பமான ஒரு பெண்ணை தன்னால் ஏற்று கொள்ள முடியாது என்றும் மறுத்து சண்டை போட்டுள்ளதாகவும் தெரிகிறது..
இதனால் வேறு வழியின்றி கண்ணீருடன் விருதுநகர் மகளிர் போலீசுக்கு சென்ற சிறுமி, சிறுவன் மீது புகாரும் தந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்... சிறுமியை கடத்தி சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றவர்கள் அளவுக்கு அதிகமாக செல்லம் தந்து வளர்த்தும், அறிவுரைகளை வழங்கியும், அது எதையுமே காதில் வாங்காமல், லவ் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியேறும் பெண் பிள்ளைகள் படும் துயரம் நீண்டு கொண்டே செல்வது வருத்தமாக உள்ளது!
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications