ஓஹோ.. ஸ்டாலினுக்கு பிறகு இவர்தான் முதல்வர்.. "துண்டை போட்ட" அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!
விருதுநகர்: ‛‛கருணாநிதிக்கு பிறகு முக ஸ்டாலின் முதல் அமைச்சராக பொறுப்பேற்றது போல் அவருக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல் அமைச்சராக பொறுப்பேற்க தயாராக உள்ளார்'' என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஓராண்டில் செய்த சாதனை குறித்து மாவட்டங்கள் தோறும் திமுக சார்பில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் திமுக அரசின் ஓராண்டு சாதனை பற்றிய விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக முதல்வராக திமுக கட்சியில் கருணாநிதிக்கு பிறகு முக ஸ்டாலின் பொறுப்பேற்றது போல் அவருக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க தயாராக உள்ளார். வாரிசாக இருந்தாலும் முக ஸ்டாலின், உதயநிதி ஆகிய இருவரும் பல்வேறு சிரமங்களை தாண்டி மேலே வந்தவர்கள்.
திமுகவை எதிர்த்து சண்டையிட ஆள் இல்லை. முதலில் அதிமுக ஒன்று சேர்ந்து நம்மை எதிர்க்கட்டும். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கேடுகெட்ட ஆட்சி நடைபெற்றது. அவர்கள் கஜானாவை சுரண்டிவிட்டனர். தற்போது திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. நமது முதல்வர் நல்லவர். ஒவ்வொருவர் குடும்பத்திலும் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி டெல்லிக்கு பயப்படாது. டெல்லிக்கு பயப்படாத தலைமை தான் தமிழகத்தில் உள்ளது'' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications