புயலுக்கு லீவா.. உங்க சைக்கில ரெடி பண்ணி ஸ்கூல் போற வழிய பாருங்க..விருதுநகர் கலெக்டர் நச் பதில்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: புயல் உடைய தாக்கம் நம்ம மாவட்டத்திற்கு குறைவு தான். அதனால் ஒழுங்கா உங்க சைக்கில ரெடி பண்ணி ஸ்கூல் போற வழிய பாருங்க என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

புயல் காரணமாக தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Virudhunagar Collectors Reply To Students Leave Inquiry

கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, திருப்பத்தவேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலால் இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது.

இந்தநிலையில், விருதுநகர் மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படுமா என்று ட்விட்டரில் மாணவர்கள் சிலர் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மாவட்ட ஆட்சியர் நகைச்சுவையாக பதில் அறித்துள்ளார்.

தற்போது புயல் காரணமாக தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் நம்ம மாவட்டத்திற்கு புயல் காரணமாக லீவ் ஏதும் விட வாய்ப்பிருக்கா என்று மாணவர் ஒருவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. அதற்கு மாவட்ட ஆட்சியர் புயல் உடைய தாக்கம் நம்ம மாவட்டத்திற்கு குறைவு தான். அதனால் ஒழுங்கா உங்க சைக்கில ரெடி பண்ணி ஸ்கூல் போற வழிய பாருங்க என்று அட்வைஸ் செய்து ரிப்ளை செய்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மாணவர்கள் அவ்வப்போது டிவிட்டரில் அரசு அதிகாரிகளோடு தொடர்பில் இருந்து வருகின்றனர். அதிலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எப்போதும் சமூக வலைதளங்களை கவனித்து வருபவர் என்பதால், கொஞ்சம் மழை பெய்தால் போதும் டிவிட்டரில் வந்து லீவ் கேட்டு டிவிட் போட துவங்கிவிட்டனர்.

கடந்த முறை காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடுமுறை 25 மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்திற்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படவில்லை. ஆனால், ஒரு தனியார் செய்தி நிறுவனம் எப்போதோ போட்ட விருதுநகர் மாவட்டத்திற்கு பள்ளிகள் விடுமுறை என்ற ஸ்க்ரீன் ஷாட் நேற்று ட்ரெண்டானது. இதையடுத்து பள்ளி மாணவர் ஒருவர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டியை ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து, "சார் என்ன சார் புதுசா கிளப்பிட்டு இருக்காங்க.. கன்பார்ம் பண்ணுங்க சார்" என்று பதிவிட்டு இருந்தார்.

இதை பார்த்த விருதுநகர் மாவட்ட கலெக்டர் காமெடியாக பதிலளித்தார். அதில், "பாலே இங்க தேறல, பாயாசம் கேக்குதா..? மழை இல்லை, ஸ்கூல் இருக்கு. இது தவறான செய்தி. சீக்கிரம் போய் தூங்கு, காலையில் பள்ளிக்கு போகணும். குட் நைட்" என்று பதிவிட்டு இருந்தார். அந்த ட்வீட் வைரலானது. அதுபோல இன்றைய தினம் ட்விட்டர் பதிவும் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+