Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யப்பா.. இவ்வளவு பெரிய மீனா! ஏழை மீனவர்களிடம் அகப்பட்ட "மாஸ்" மீன்.. ஆனால் அங்கதான் ஒரு ஆபத்து!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சிலி நாட்டு மீனவர்கள் 16 அடி ராட்சத மீன் ஒன்றை கிரேன் மூலம் தூக்கும் வீடியோ டிக்-டாக்கில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த மீன் கடற்கரை அருகே பிடிபட்டுள்ளதால் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுமோ என்ற பீதியும் மக்கள் மத்தியில் கலங்கடித்து வருகிறது.

Recommended Video

    ஏழை மீனவர்களிடம் அகப்பட்ட மாஸ் மீன்.. ஆனால் அங்கதான் ஒரு ஆபத்து!

    பூமியில் 75 சதவீதத்திற்கும் மேலான பரப்பைக் கொண்டது கடல். கடலில் ஏராளமான மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் வசித்து வருகின்றன. அவ்வப்போது வினோத கடல் விலங்குகளும் திமிங்கலம் போன்ற பெரிய மீன்களும் கடல் பயணம் செய்பவர்களின் கேமிராக்களில் சிக்கி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வலம் வரும்.

    அப்படிதான் சிலி நாட்டில் அகப்பட்ட 16 அடி நீளம் கொண்ட ராட்சத துடுப்பு மீன் ஒன்று டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த வீடியோ டிக்-டாக்கில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது.

     நிலநடுக்கம் ஏற்படுமா?

    நிலநடுக்கம் ஏற்படுமா?

    சிலி நாட்டு மீனவர்கள் அந்த ராட்சத மீனை கடலில் இருந்து கிரேன் மூலம் தூக்கி செல்கின்றனர். இவ்வளவு பெரிய மீனா என திகைக்கும் வகையில் அந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    எனினும் ஒரு சிலர் இந்த துடுப்பு மீன் கடற்கரை அருகில் சிக்கியுள்ளதால், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என குண்டை தூக்கி போட்டுள்ளனர். இதனால் பலர் கலக்கமடைந்துள்ளனர்.

     36 அடி வரை வளருமா?

    36 அடி வரை வளருமா?

    ஒர்ஃபிஷ் என்று அழைக்கப்படும் துடுப்பு மீன் என்பது மிகவும் நீளமாகவும், சதைபிடிப்பற்ற தட்டையான, ஒரு கடல் மீன் இனம். இந்த மீன்கள் பெரும்பாலும் மிதவெப்ப மண்டல கடல்பகுதிகளில்தான் காணப்படும். அரிதாகவே இந்த துடுப்பு மீன்கள் காணப்படுகின்றன.

    உலகின் மிக நீண்ட மீன் இனங்களில் ராட்சத துடுப்பு மீனும் ஒன்றாகும். இவை அதிகபட்சமாக 36 அடி நீளம் வரை வளரக்கூடியது. கடலின் ஆழத்தில் தான் இவ்வகை மீன்கள் பெரும்பாலும் காணப்படும்.

     டெக்டானிக் பிளேட்களின் அசைவு காரணமாக

    டெக்டானிக் பிளேட்களின் அசைவு காரணமாக

    இதனால் நெட்டிசன்கள் சிலர், இந்த உயிரினம் கடல் மேற்பரப்பில் தென்படுவது சுனாமி மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதை சுட்டிக்காட்டும் ஒரு கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது என தெரிவித்து வருகின்றனர். இது, அங்குள்ள மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

    ஆழ்கடலில் மட்டுமே வசிக்கக்கூடிய இந்த ஓர்ஃபிஷ், கடலின் கரையோரத்தில் தென்படுவது ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் கூட இருக்கலாம் எனவும் சில நெட்டிசன்கள் விவாதத்தை மேலும் சூடாக்கினர். நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு மைய காரணமாக விளங்கும் டெக்டானிக் பிளேட்களின் அசைவு காரணமாக இந்த ராட்சத மீன்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் எனவும் விவாதம் செல்கிறது.

     அரிதான ஒன்றே

    அரிதான ஒன்றே

    ஓர்ஃபிஷ் கடலின் கரைபகுதியில் தென்படுவது நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி ஏற்படுவதை குறிக்கும் என்று இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இது குறித்து கடல்சார் வல்லுனர்கள் கருத்து என்னவென்றால், ஓர்ஃபிஷ் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, இறக்கும்போது அல்லது இனப்பெருக்க காலத்தில் கடலின் மேற்பரப்புக்கு வருவது இயல்பானதுதான். எனினும், இந்த மீன்கள் நம் கண்களின் தென்படுவது அரிதான ஒன்றே" என்கின்றனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் நியூசிலாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் ஓர்ஃபிஷ் மீன் தென்பட்டது. கடற்கரைக்கு பொழுதை போக்குவதற்காக வந்த மக்கள் இதைக்கண்டு திகைத்து போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+