வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த சுட்டிக்கு 2 வயசு கூட ஆகலை! ஆனா, செஞ்ச வேலையை பாருங்க!.. இதுல ஒன்னும் தெரியாத மாதிரி முழி வேற!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 2 வயசு கூட இன்னும் முடியலை. அதுக்குள்ள அம்மா போன்ல விளையாண்டுகிட்டே இவன் செய்த காரியத்தால பெற்றோர் அழறதா, இல்லை சிரிக்கிறதா என தெரியாத நிலையில் உள்ளார்கள்.

குழந்தைகளுக்கு கதை சொல்லி, வேடிக்கை காட்டி உணவு ஊட்டுவதும் அழுத குழந்தையை சமாதானம் செய்வதும் 90ஸ் கிட்ஸ்கள் வரை நடந்தது. ஆனால் அதன் பிறகு டிவியை காட்டி உணவு ஊட்டும் போக்கும் இருந்தது.

அமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கைஅமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கை

இதன் பிறகு குழந்தைகள் செல்போன் இல்லாமல் இருப்பதே இல்லை என்ற அளவுக்கு வந்துவிட்டது. அதில் யூடியூப் மூலம் வீடியோக்களை பார்ப்பது, கேம் விளையாடுவது என பொழுதை கழிக்கிறார்கள். செல்போன் கொடுக்காவிட்டால் அந்த குழந்தையை சமாளிக்க முடியாத அளவுக்கு பெற்றோர் தொல்லை கொடுத்து கடைசியில் போனை கொடுக்கும் நிலை ஏற்படும்.

டெக்னிக்குகள்

டெக்னிக்குகள்

பெரியவர்களுக்கு தெரியாத டெக்னிக்குகள் கூட குழந்தைகளுக்கு தெரியும். இது ஒரு புறமிருக்க ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் போக்கும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் இந்த கொரோனா காலத்தில் அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் புக் செய்துவிடுகிறார்கள். இதனால் போன்களில் ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளை வைத்திருப்பது வழக்கம்தான்.

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்

இந்த செல்போன் விளையாட்டாலும் ஆன்லைன் ஷாப்பிங் ஆப்பாலும் அமெரிக்காவில் ஒரு குடும்பம் சிறியதொரு சிக்கலை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி பகுதியை சேர்ந்தவ பிரமோத் குமார். இவரது மனைவி பெயர் மது குமார். இவர்களுக்கு 22 மாதத்தில் ஆயன்ஷ் குமார் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். ஒரு நாள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ததாக நிறைய பெட்டி பெட்டியாக இவர்களது வீட்டுக்கு வந்திறங்கியது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதுகுறித்து மது குமார், கணவர் பிரமோத்திடம் கேட்டுள்ளார். அவர் தான் எதையும் ஆர்டர் செய்யவில்லை என்றார். அது போல் மது அவரது குழந்தைகளிடம் கேட்டுள்ளார். அவர்களும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். பின்னர்தான் மதுகுமார் பெயரில் வந்ததால் அவரது போனை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.

அழுவதா சிரிப்பதா

அழுவதா சிரிப்பதா

அதாவது ஆன்லைனில் தமக்கு தேவையான பொருட்களை மெதுவாக வாங்குவதற்காக விஷ் லிஸ்டில் போட்டு வைத்திருந்தார். அவை அனைத்தும் இந்த சுட்டி பையன் கேம் விளையாடும் போது ஆர்டர் செய்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் நடந்தவற்றை அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் கூறி தங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள பொருட்களை திரும்ப எடுத்துக் கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விளையாண்டுகிட்டிருந்த நேரத்தில் இந்த சுட்டி பையன் செய்த காரியத்தை நினைத்து அழுவதா சிரிப்பதா என தெரியாமல் பெற்றோர்கள் உள்ளனர்.

English summary
22 months old toddler orders furniture worth Rs 1.5 lakh from walmart while he was playing in mom's phone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X