2022-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு.. அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
வாஷிங்டன்: 2022-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் சர்வதேச அளவில் அளப்பறிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.

பொருளாதாரத்துக்கான..
அந்த வகையில் நடப்பு 2022-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்காவை பென் பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துகான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மக்களின் உரிமைக்காக போராடியதற்காக
அமைதிக்கான நோபல் பரிசை 2 அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பெலாரசை சேர்ந்த வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதேபோல், ரஷ்யாவின் மெமோரியல் என்ற மனித உரிமை அமைப்புக்கும் உக்ரைனின் சிவில் லிபர்டி என்ற மனித உரிமை அமைப்புக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறைக்கு
மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மரபியல் நிபுணரான ஸ்வாண்டே பாபோவுக்கு வழங்கப்பட்டது. நவீன மனிதர்களின் அழிந்துபோன உறவினராக கருதப்படும் நியாண்டர்டாலின் மரபணுவை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியதற்காக ஸ்வான்டே பாபோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இயற்பியல், வேதியல்
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அலைன் ஆஸ்பெக்ட் (பிரான்ஸ்), ஜான் எப் கிளாசர் (அமெரிக்கா), ஆண்டன் ஜீலிங்கர் (ஆஸ்திரியா) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. வேதியிலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் கரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவின் பேரி ஷார்ப்லெஸ் அகிய 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு
இலக்கியத்திற்கான நோபல் பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. L Occupation என்ற நூலை எழுதியதற்காக ஆனி எர்னாக்ஸூக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பாலின பாகுபாட்டிற்கு எதிரான கருத்துக்களை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உண்மைகளை உடைத்து எழுதக்கூடிய எழுத்தாளராக ஆனி எர்னாக்ஸ் அறியப்பட்டு வருகிறார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications