"உனக்கு 24.. எனக்கு 61" இளைஞரை மணந்த பாட்டி! ‘குழந்தை’ பெறவும் திட்டமாம் - இவ்ளோ கோடி செலவா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் 37 வயது வித்தியாசம் கொண்ட வைரல் தம்பதி வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முடிவு செய்து இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்தவர் செரில் (வயது 61). இவருக்கு ஏற்கனவே 7 பிள்ளைகளும், 17 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் இவரும் அமெரிக்காவின் ஜார்ஜியாவை சேர்ந்த மெக்கெயின் என்ற டிக்டாக் பிரபலமும் காதலித்து வந்துள்ளனர்.

எப்படி காதல்?
37 வயது வித்தியாசம் கொண்ட இந்த இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதன்முதலில் சந்தித்துள்ளனர். அப்போது மெக்கெயினுக்கு 15 வயது மட்டுமே. அதன் பின்னர் 8 ஆண்டுகள் சந்தித்துக்கொள்ளாத இருவரும் 2020 ஆம் ஆண்டு சந்தித்தபோது காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்துள்ளனர். இதனை 22 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட தனது டிக்டாக் கணக்கிலும் மெக்கெயின் வெளிப்படையாக அறிவித்தார்.

டிக் டாக் ரசிகர்கள்
அவரது அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின. செரிலை திருமணம் செய்துகொள்ள இருப்பதையும் அவர் உறுதி செய்தார். இதனை தொடர்ந்து செரிலுக்கு திருமணத்தன்று மோதிரம் போடுவதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி டிக்டாக் மூலம் உதவி கோரி இருந்தார் மெக்கெயின். இதனை கேட்ட ரசிகர்கள் பெரும் தொகையை அவருக்கு கொடுத்து உதவினர்.

திருமணம்
அதன் மூலம் விலை உயர்ந்த மோதிரத்தை திருமணத்தன்று செரிலுக்கு அணிவித்து மகிழ்ந்தார் மெக்கெயின். மெக்கெயின் - செரில் தம்பதியின் திருமணம் டென்னசி நகரில் நடைபெற்றது. நேரலை செய்யப்பட்ட அவர்களது திருமண வீடியோவை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கண்டு ரசித்தனர். அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் இவர்களின் திருமணம் பேசுபொருளானது.

குழந்தைக்கு திட்டம்
காதலுக்கு வயதில்லை என்று பலரும் மெக்கெயின் - செரில் தம்பதியை வாழ்த்தினர். இந்த நிலையில்தான் மெக்கெயின் - செரில் தம்பதி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து இருக்கின்றனர். செரிலுக்கு வயது அதிகம் என்பதால் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ரூ.1.14 கோடி செலவாகும் என்று மருத்துவர்கள் அவர்களிடம் தெரிவித்து இருக்கின்றனர்.

என்ன சொல்கிறார் செரில்
இதுகுறித்து பேசிய செரில், "மெக்கெயின் எப்போதும் குழந்தைகளை விரும்புபவர். அவரது குழந்தைக்கு தாயாக நான் விரும்புகிறேன். வயது காரணமாக வாடகைத் தாய் முறைப்படி குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறேன். அல்லது குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறேன். எங்களிடன் உறவை குடும்பமும் ஆதரிக்கிறது. எனது பேரக்குழந்தைகள் மெக்கெயினை தாத்தா என்று அழைப்பார்கள்." என்றார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications