தடுப்பூசி போடாமல் எப்படி ஆபீஸுக்கு வரலாம்.. 3 ஊழியர்களை.. வேலையை விட்டுத் தூக்கிய சிஎன்என்
வாஷிங்டன்: சிஎன்என் நிறுவனம் கொரோனா தடுப்பூசி போடத் தவறிய தனது 3 ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கியுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத இந்த மூவரும் அலுவலகத்திற்கு வந்ததால் இந்த நடவடிக்கையை சிஎன்என் எடுத்துள்ளது.
இதுகுறித்து கூறிய சிஎன்என் நிறுவன தலைவர் ஜெப் சக்கர், 3 பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் அலுவலகத்திற்கு வந்தது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் நாங்கள் பொறுமை காட்ட முடியாது என்றார் அவர்.

3 ஊழியர்கள் நீக்கம்
முன்னதாக இந்த மூன்று பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் அலுவலகம் வந்தது தொடர்பாக புகார் மேலிடத்திற்குச் சென்றது. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு இவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதற்கு மூன்று பேரும் விளக்கம் அளித்தனர். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதை ஒப்புக் கொண்டிருந்தனர். இதையடுத்து அலுவலக கொள்கை முடிவை மீறும் வகையில் செயல்பட்டதால் 3 பேரையும் நீக்கி உத்தரவிட்டது நிறுவனம்.

அக்டோபர் முதல் ஆபீஸ் திறப்பு
இதற்கிடையே, அக்டோபர் மாதத்திலிருந்து அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் இயல்பு நிலைக்குத் திரும்பவுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. முன்னதாக இதை செப்டம்பர் 7ம் தேதி முதல் என்று நிர்ணயித்திருந்தது. அது தற்போது அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. இதையும் சக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து சக்கர் கூறுகையில், இது எளிதான முடிவு அல்ல. மிகுந்த பரிசீலனைக்குப் பிறகே தள்ளிப் போட்டுள்ளோம். விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார் சக்கர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்
சக்கர் மேலும் கூறுகையில், கொரோனா தடுப்பூசி அனைவரும் போட வேண்டும். இது கட்டாயம். கொரோனா குறித்த விழிப்புணர்வு மட்டும் அல்லாமல், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதுதொடர்பான பயம், குழப்பம், பதட்டம், விரக்தி அனைவரிடத்திலும் இருக்கவே செய்யும். அதை மறுப்பதற்கில்லை. எனக்கும் கூட இருந்தது. ஆனால் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டியது இப்போதைய அவசியமாகும் என்றார்.

மைக்ரோசாப்ட்டும் கட்டாயம்
இதற்கிடையே தடுப்பூசி போடாத 3 ஊழியர்களை சிஎன்என் நீக்கியுள்ளது மீடியா உலகில் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு முழு அளவில் திரும்புவதற்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி தனது அமெரிக்க அலுவலகங்களை திறக்கவுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். அதற்கு முன்பு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.

ஊசி போடாட்டி வராதீங்க
செப்டம்பர் மாதம் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கையை மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கவுள்ளது. ஊழியர்கள் மட்டுமல்லாமல், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் பிற ஊழியர்களுக்கும், விசிட்டர்களுக்கும் கூட தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

அமேசான் - கூகுள் - பேஸ்புக்
இதேபோல இ காமர்ஸ் நிறுவனமான அமேசானும் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கியுள்ளது. தனது அலுவலகங்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் இது திறக்கத் திட்டமிட்டுள்ளது. முன்னதாக செப்டம்பரில் திறக்க அது தீர்மானித்திருந்தது. ஆனால் தற்போது அதைத் தள்ளிப் போட்டு விட்டது. தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும்போது , முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. இதேபோலத்தான் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications