அமெரிக்காவில் கார் மீது வாகனம் மோதி விபத்து.. 3 இந்திய மாணவர்கள் பலி.. 4 பேர் படுகாயம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்த இந்திய மாணவர்கள் 3 பேர் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நியூ ஹேவன் பல்கலைக்கழகம் மற்றும் சேக்ரட் ஹார்ட் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். இதில் இந்த இரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர்கள் சிலர் நேற்று காரில் வெளியே புறப்பட்டு சென்றிருந்தனர்.
அதிகாலை நேரத்தில் அவர்களது கார் மீது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த மற்றொரு வாகனம் மோதியது. மாணவர்கள் சென்ற கார் மீது வாகனம் மோதியதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் காரில் இருந்த இந்திய மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு வாகனத்தில் வந்த கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிரேம்குமார் ரெட்டி கோடா (வயது 27), பவானி குல்லப்பள்ளி (22)மற்றும் சாய் நரசிம்ம பாடம்செட்டி (22) ஆகிய 3 இந்திய மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்துள்ளது.
இதேபோல காயமடைந்த மனோஜ் ரெட்டி டோண்டா (23), ஸ்ரீதர் ரெட்டி சிந்தகுண்டா(22), விஜித் ரெட்டி கும்மாலா (23) மற்றும் ஹிமா ஐஸ்வர்யா சித்திரெட்டி (22) ஆகிய 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தில் இருந்த ஒருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் குறித்து அறிய இந்திய தூதரத்தில் இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications