அப்பா வந்துட்டாங்க.. படிக்க ஸ்டார்ட் பண்ணு.. சிறுமியை அலர்ட் செய்யும் நாய்.. பரவும் க்யூட் வீடியோ
வாஷிங்டன்: படிக்காமல் வீட்டில் ஜாலியாக டிவி பார்த்துக்கொண்டு இருந்த சிறுமியிடம் அவளது தந்தை வருவதை அறிந்து நாய் ஒன்று அலர்ட் கொடுக்கும் வீடியோ இணையத்தில் நெட்டிசன்களை ரசிக்க வைத்துள்ளது.
வீட்டில் படிக்கும் நேரத்தில் டிவி பார்த்துக்கொண்டும் விளையாடிக்கொண்டு இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டிப்பதுண்டு.
என்னதான் அப்பா இப்படி அக்கறையில் கண்டித்தாலும் சைக்கிள் கேப் கிடைத்தாலும் அதிலும் ஆட்டம் பாட்டம் என டிவி பார்ப்பது மொபைல் பார்ப்பது என இப்போதுள்ள பிள்ளைகள் எளிதில் பெற்றோரை ஏமாற்றி விடுகின்றனர்.

இணையத்தில் பரவும் வீடியோ
அதுவும் சில நேரங்களில் அப்பா வெளியே சென்றால் டிவி பார்த்து, செல்போன் பார்த்து நேரத்தை கழிக்கும் பிள்ளைகள் அப்பா வரும் சத்தம் கேட்டால்.. நல்ல பிள்ளையாக புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவர். இது அனைவரது வீட்டிலும் பார்க்கக் கூடிய இயல்பான ஒரு காட்சிதான். இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருக்கும் ஒரு சிறுமியை அவளது அப்பா வருவதை அலர்ட் செய்து படிக்க வைக்கும் செயலில் நாய் ஒன்று ஈடுபடும் காட்சிதான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

காலால் தட்டி கொடுக்கும் நாய்
ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த நாய்க்கும் சிறுமிக்கும் உள்ள அழகான பிணைப்பு இணையவாசிகளை ரசிக்க வைப்பதாக உள்ளது. சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோவில், சிறுமி தனது வீட்டில் ஹாயாக உட்கார்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டு நேரத்தை கழித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது வெளியே சென்று இருந்த சிறுமியின் தந்தை வீடு திரும்புகிறார். சிறுமி டிவி பார்ப்பதை கவனித்துக்கொண்டு இருந்த நாய், சிறுமியின் தந்தை வரும் சத்தத்தை உணர்ந்ததும் உடனடியாக சிறுமியை தனது காலால் தட்டுகிறது.

ரசிக்க வைக்கும் வகையில்..
இதனால், உஷாரான சிறுமி உடனடியாக டிவியை ஆஃப் செய்து விட்டு, தனக்கு முன்னே இருந்த மேஜையில் உள்ள நோட்டு புத்தகங்களை எடுத்து எழுதத் தொடங்குகிறார். வெளியில் இருந்து வரும் தந்தையும் தனது மகள் சின்சியராக படித்துக்கொண்டு இருக்கிறாளே என்ற பெருமிதத்துடன் உள்ளே செல்கிறார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையதளத்தில் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை ரசித்து கருத்துக்களையும் லைக்குகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து
நெட்டிசன்கள் பலரும் சிறுமி மீது அந்த நாய் காட்டும் பாசத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் தந்தையின் செயலை விமர்சித்தும் பதிவிட்டு உள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இந்த வீடியோ பார்ப்பதற்கு அழகாக உள்ளது. சிறுமிக்கு துணையாக இருக்கும் அந்த நாய் எவ்வளவு அழகாக அவளது தந்தை வருவதை அலர்ட் செய்கிறது. ஆனால், சிறுமியின் தந்தையோ ஒரு ஹாய் கூட சொல்லாமல் வேகமாக சென்று கொண்டு இருக்கிறார். வெளியில் இருந்து வீட்டுக்கும் வரும் போது இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமா? என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளனர்".

ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள்
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக இந்த சிறுமிக்கு வீட்டில் கேமரா இருப்பது தெரியாமல் இருந்து இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறும் போது, "நாய்களுக்கு ஒரு குழந்தையின் அளவுக்கு அறிவு உள்ளது. அதுவும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் ஒருபோதும் உங்களை விட்டு கொடுக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications