Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்பால் பாதிக்கப்படும் இந்தியா.. "H-1B விசா" 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு! நிலைமை மோசம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசா மூலம் இந்தியர்களே அதிகம் பலனடைந்து வந்த நிலையில், இப்போது நிலைமை மாற ஆரம்பித்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் விசா விதிகளைக் கடுமையாக்கி வரும் சூழலில், இந்திய நிறுவனங்களுக்கு விசா கிடைப்பது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாகச் சரிந்துள்ளது.

அமெரிக்காவில் டிரம்ப் வருகைக்குப் பிறகு விசா விதிகள் மாற்றப்பட்டுள்ளது.. அங்கு வெளிநாட்டினருக்கு எதிராகப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹெச்-1பி விசாவில் பல ரூல்ஸ்கள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. ஹெச்-1பி விசாவால் இந்தியர்களே அதிகம் பயனடைந்த நிலையில், இது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

America H-1B Visa Petitions by Indian IT Giants Plunge to 10-Year Low TCS Infosys Lead Decline

கடும் சரிவு

இதற்கிடையே நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்றவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவின் டாப் ஏழு ஐடி நிறுவனங்களுக்கு, 2025ல் 4,573 புதிய ஹெச்-1பி விசா ஒப்புதல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2015ல் கிடைத்த ஹெச்-1பி விசாவை விட இது 70% சரிவாகும். மேலும் 2024ஐ விட இது 37% குறைவு என NFAP எனப்படும் நேஷனல் ஃபவுண்டேஷன் ஃபார் அமெரிக்கன் பாலிசி அமைப்பு தெரிவித்துள்ளது.

காரணம் என்ன!

இந்திய நிறுவனங்களின் ஹெச்-1பி விசா எண்ணிக்கை குறைந்த அதேநேரம் அமெரிக்க நிறுவனங்களின் ஹெச்-1பி விசா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் ஏஐ துறையில் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் போட்டி போட்டிக் கொண்டு இதில் முதலீடு செய்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கும் திறமையான ஊழியர்களைத் தங்கள் நிறுவனத்திற்கு அழைத்து வருகிறார்கள். இதன் காரணமாக அமெரிக்க நிறுவனங்களுக்கான விசா அதிகரித்துள்ளது.

விசா

ஏற்கனவே அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவில் இருப்போருக்கு விசா நீடிப்பு கிடைப்பதிலும் இந்திய நிறுவனங்கள் பலத்த அடி வாங்கியுள்ளது. இந்த விசா நீட்டிப்பில் முதல் ஐந்து நிறுவனங்களில் டிசிஎஸ் மட்டுமே ஒரே இந்திய ஐடி நிறுவனமாக இருக்கிறது. அதற்குக் கூட விசா நீட்டிப்பு நிராகரிப்பு விகிதம் 2024ல் 4%ஆக இருந்த நிலையில், இப்போது அது 7% ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு, டிசிஎஸ் நிறுவனம் 5,293 ஹெச்-1பி விசா நீட்டிப்பு ஒப்புதலைப் பெற்றுள்ளது.

மேலும், புதிய விசாவை பொறுத்தவரை டிசிஎஸ் நிறுவனத்திற்கு 846 ஒப்புதல்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு இது 1,452ஆக இருந்த நிலையில், இப்போது அது கடுமையாகச் சரிந்துள்ளது.

நிலைமை மாறிடுச்சு

ஹெச்-1பி விசாக்களில் இந்திய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இப்போது அந்த நிலை மாறி வருவதையே இது காட்டுகிறது. நடப்பாண்டில் அதிக H-1B ஒப்புதல்களைப் பெற்ற முதல் 25 நிறுவனங்களில் வெறும் மூன்று இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த டேட்டா டிரம்ப் ஹெச்-1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்துவதற்கு முன்பு தரப்பட்ட ஒப்புதலாகும். விசா கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை மேலும் சரியும் என்றே தெரிகிறது. இந்தியாவில் டிசிஎஸ் தவிர வேறு எந்தவொரு நிறுவனமும் தங்கள் ஊழியர்களை அமெரிக்கா அனுப்ப ஆர்வம் காட்டுவதில்லை.

யார் அதிகம்

H-1B ஒப்புதல்களைப் பொறுத்தவரை அமேசான் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 4,644 ஒப்புதல்கள் கிடைத்துள்ளன. அதைத் தொடர்ந்து மெட்டா (1,555), மைக்ரோசாஃப்ட் (1,394) மற்றும் கூகுள் (1,050) உள்ளன. H-1B ஒப்புதல்களில், முதல் நான்கு இடங்களை அமெரிக்க நிறுவனங்கள் பிடித்தது இதுவே முதல் முறையாகும். அடுத்து 846 ஒப்புதல்கள் உடன் டிசிஎஸ் 5வது இடத்தில் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+