சீனாவில் பரவும் கொரோனா.. அமெரிக்கா போட்ட அதிரடி உத்தரவு.. விமான பயணிகளின் கவனத்துக்கு.. என்ன?
வாஷிங்டன்: சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியாவில் கொரோனா ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கடந்த கால பாதிப்பை கருத்தில் கொண்டு சீனா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது.
2019 இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கிளம்பியது. சுமார் 200 நாடுகளுக்கு வேகமாக பரவிய இந்த வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.
ஒட்டுமொத்த உலகமும் ஊரடங்கால் முடங்கியது. மேலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சரிந்த நிலையில் தான் தற்போது சீனா, பிரான்ஸ், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்தியாவுக்கு 40 நாள் எச்சரிக்கை
குறிப்பாக சீனாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு உள்ளது. அங்கு ஓமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ்கள் பெரும் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான் இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து கொரோனா தடுப்புக்கான பணியை தீவிரமாக முன்னெடுத்துள்ளன. அடுத்த 40 நாள் என்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது எனவும், இந்தியாவில் ஜனவரியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் கட்டுப்பாடுகள் அமல்
இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக ஆர்டிசிபிஆர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கட்டுப்பாடு
இந்நிலையில் தான் தற்போது சீனா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை சீனாவில் இருந்து கிளம்பிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகள் விமான பயணத்துக்கு முன்பு கொரேனாா பரிசோதனை ஆர்டிபிசிஆர் அல்லது ஆன்டிஜென் டெஸ்ட் செய்து நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.

எந்தெந்த பயணிகளுக்கு பொருந்தும்
இதுபற்றி அமெரிக்காவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‛‛அமெரிக்காவில் இருந்து சீனா வரும் பயணிகள் விமான பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அதாவது 2 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருப்பது அவசியமாகும். இந்த கட்டுப்பாடு என்பது சீனாவில் இருந்து நேரடியாக அமெரிக்கா வருபவர்களுக்கு மட்டுமின்றி அதன் தென்கொரியாவின் சியோல், கனடாவின் டொராண்டோ, வான்கவுர் பகுதியில் இருந்து வருபவர்களுக்கும் பொருந்தும்.

எப்போது அமல்?
அமெரிக்காவின் இந்த புதிய கட்டுப்பாடு ஜனவரி மாதம் 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது'' என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை கட்டாயம் என இந்தியாவை போல் ஜப்பான், மலேசியா ஆகியவை அறிவித்த நிலையில் அமெரிக்காவும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications