யானையை வம்புக்கு இழுத்த புலி.. அப்புறம் நடந்தது தான் ட்விஸ்ட்.. எடுத்தது பாருங்க ஓட்டம்!
வாஷிங்டன்: காட்டில் புதர்கள் நிறைந்த பகுதியில் யானை ஒன்று தனியாக நடந்து செல்வதை கவனித்த புலி மெதுவாக பின் தொடர்ந்து தாக்குவதற்கு தயாராகிறது. இதை கன நேரத்தில் உணர்ந்த யானை சட்டென்று திரும்பி புலியை ஓட ஓட விரட்டியடிக்கும் காட்சி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
வன விலங்குகளில் மிகப்பெரியது யானை. தாவர உண்ணியான யானை மிகவும் சாதுவான விலங்குதான்.
மனிதர்களிடம் மிக அன்பாக பழகும் தன்மை கொண்டது என்பதை வைத்தே இதை கணக்கிட்டு கொள்ளலாம். விலங்கினங்கள் பொதுவாக யாரோடும் வீண் வம்புக்கு போகாது.

சாதுவான யானைகள்
யானையும் இதே கேட்டகிரிதான். உருவத்தில் மிகப்பெரியதாகவும்.. பிற விலங்கினங்களை காட்டிலும் பல மடங்கு பலம் கொண்டதாகவும் இருந்தாலும் யானைகள் பொதுவாக எந்த விலங்கிடமும் வம்புக்கு செல்வதில்லை. கூட்டமாக வாழும் பழக்கங்களை கொண்ட இந்த யானை இனங்கள் தான் உண்டு.. தன் வேலை உண்டு.. என்ற வகையில் வனத்தில் சுற்றித்திரியும்.

வம்புக்கு செல்லும் புலி
காட்டுக்கே ராஜா என்று சொல்லப்படும் சிங்கங்கள் கூட யானையிடம் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது. பல சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து வேண்டும் என்றால் ஒரு யானையை வீழ்த்திவிட முடியும். டிஸ்கவரி சேனல்களில் இத்தகைய காட்சிகளை கூட பலரும் பார்த்து இருப்போம். ஆனால், அதுவும் அவ்வளவு எளிதாக சாத்தியப்பட்டுவிடாது. அதேபோல், யானைகளிடம் அடிக்கடிக்கு வம்புக்கு செல்லும் ஒரு விலங்கினமாக புலியை சொல்லலாம்.

புலி யானை சண்டை
பெரிய உருவம் கொண்ட யானைகளை சில சமயங்களில் பதுங்கியிருந்து பாய்த்து புலிகள் வேட்டையாடி விடுகின்றன. ஆனால் இது புலிகளுக்கு அத்தனை எளிதல்ல. பெரும்பாலும் யானை - புலிகள் இடையேயான மோதலில் யானைதான் ஜெயிக்கும். இருந்தாலும் வனத்தில் நம்மை குறிவைக்கும் ஒரு விலங்கினம் புலி என்பதால் யானைகளும் சற்று எச்சரிக்கையாகவே புலியை அணுகும்.

மெதுவாக பின் தொடர்ந்து..
அந்த வகையில்தான் சமூக வலைத்தளங்களில் தற்போது யானையிடம் வம்புக்கு சென்று பின்னங்கால் பிடறியடிக்க புலி ஓடும் காட்சிகள் ஒன்று வேகமாக பரவி வருகிறது. சந்தோஷ்சாகர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். 45 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோவில், புதர்கள் நிறைந்த பகுதியில் யானை ஒன்று தனியாக நடந்து செல்கிறது. இதை கவனித்த புலி மெதுவாக பின் தொடர்ந்து தாக்குவதற்கு தயாராகிறது.

புலியை ஓட ஓட விரட்டிய யானை
இதை கன நேரத்தில் உணர்ந்த யானை சட்டென்று திரும்பி புலியை ஓட ஓட விரட்டியடிக்கிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது நெட்டிசன்களை ரசிக்க வைத்துள்ளது. வீடியோவுக்கு கேப்ஷனாக யானையை புலியால் மிரட்ட முடியும்.. ஆனால், கொல்ல முடியாது என்று பதிவிடப்பட்டுள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications