வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் பரவும் பி.1.617 உருமாறிய வைரஸ் மூன்றாக உருமாறும் : உலகச் சுகாதார அமைப்பு

இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வேரியண்ட் பி.1.617 உருமாறிய வைரஸ் ஆகும். இது மூன்றாக உருமாறும் தன்மை உடையது.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வைரஸ் முழுதுமே கவலையளிக்கக் கூடிய பெரிய அச்சுறுத்தல் என்று கூறிய உலகச் சுகாதார அமைப்பு தற்போது B.1.617.2 உருமாறிய கொரோனா வைரஸ்தான் கவலையளிக்க கூடிய ஒரே வேரியண்ட் என்று தெரிவித்துள்ளது. இது மூன்றாக உருமாறும் தன்மை உடையது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகச் சுகாதார அமைப்பு தனது வாரந்திர தொற்று நோய் புதிய அறிவிப்பில், B.1.617.2 வேரியண்ட் மட்டும்தான் இப்போது மக்களிடத்தில் பரவும் பெரிய ரிஸ்க்கான வைரஸ் ஆகும் பி.1.617 வைரஸ்கள் மற்ற பிரதிகள் அல்லது உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் குறைந்த அளவில்தான் பரவுகிறது என்று கூறியுள்ளது.

B.1.617 variant first detected in India and was divided in three lineages

ஆகவே B.1.617.2 உருமாறிய கொரோனா தான் இப்போது கவலையளிக்க கூடிய வேரியண்டாக உள்ளது. அதாவது டெல்டா என்று கிரேக்க பெயரிடப்பட்ட வேரியண்ட் மட்டும்தான் இப்போது கவலையளிக்கக் கூடியதாக உள்ள்து.

முன்னதாக இந்தியாவில் கண்டறியப்பட்ட, பி.1.617.1 மற்றும் பி.1.617.2 ஆகிய இருவகை கொரோனா வைரஸ்களுக்கு, முறையே, கப்பா மற்றும் டெல்டா என, கிரேக்க மொழியால் ஆன பெயர்களை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.

புதிய வகை உருமாறிய வைரசை, அது கண்டறியப்பட்ட நாட்டின் பெயருடன் சேர்த்து அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து கிரேக்கப் பெயரை உலகச் சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.

இந்த பி.1.617.2 என்ற வேரியண்ட் தான் தற்போது சில நாடுகளில் பரவி வருவகிறது. இந்த வேரியண்ட் குறித்த மேல் ஆய்வுகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று உலகச் சுகாதார அமைப்பு கூறுகிறது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் கொரோனாவுக்கு பீட்டா என்றும் பிரேசில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு காமா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    உலகை அச்சுறுத்தும் Vietnam-ல் பரவும் உருமாறிய கொரோனா.. இதுவரை தோன்றியதிலேயே மோசமானது.. ஏன்?

    வியட்நாமில் பரவி வரும் கொரோனா வகை பிரிட்டன் மற்றும் டெல்டா வகையின் கூட்டுக்கலவை என்று உலகச் சுகாதார அமைப்பு கூறியிருந்தது.

    English summary
    The World Health Organisation (WHO) has said,the B.1.617 variant was first detected in India and was divided in three lineages B.1.617.1, B.1.617.2 and B.1.617.3.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X