குழந்தைகளுக்கு பரவும் குரங்கு அம்மை? உலகம் முழுவதும் அதிகரிக்கும் பாதிப்பு! நிபுணர்கள் சொல்வதென்ன?
வாஷிங்டன் : உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் ஒன்பது பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரியவர்களை விட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை குரங்கு அம்மை அதிக அளவில் பாதிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
இந்தியா மட்டுமல்லாது உலக முழுவதிலும் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தி உள்ளன.
இந்தியாவில் தற்போது வரை 9 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். டெல்லி கேரளா ஆகிய மாநிலங்கள் குரங்கு அம்மை பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் கொரோனா போன்ற ஒரு சுகாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

குரங்கு அம்மை
இந்த நிலையில் தற்போதைய தகவல்களின்படி பெரும்பாலும் பெரியவர்கள் இடையே தான் குரங்கு அம்மை பரவி வந்திருக்கிறது. அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை பெரும்பாலானோர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்ற ஆறுதல் இருந்தாலும் குழந்தைகளுக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது சுகாதார நிபுணர்களை பெறும் அதிர்ச்சியில் ஆழ்படுத்தி இருக்கிறது.

குழந்தைகளுக்கும் பாதிப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த ஒரு குழந்தைக்கு என இருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பொதுவாக குரங்கு அம்மை நெருங்கிய தொடர்பு மூலம் பரவுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது குழந்தைகளுக்கும் பரவி இருப்பது மருத்துவ நிபுணர்களையும் பெற்றோர்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

என்ன காரணம்?
ஏற்கனவே குரங்கு அம்மை பாதிப்பு இருக்கும் வயது வந்தோர் குழந்தைகளை கட்டியணைப்பது முத்தமிடுவது தூக்கி வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்றவை காரணமாக குரங்கு அம்மை குழந்தைகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாகவும் கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு பரவினால் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அபாயம் அதிகமாக இருக்கிறது. எனவே குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இருக்கும் வீடுகளில் வசிக்கும் பெரியவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தடுப்பூசி உள்ளதா?
தற்போது இரு குழந்தைகளுக்கு குரங்கு அம்மை பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த தெளிவான தகவல்களும் விளக்கங்களும் இதுவரை இல்லை என்றாலும் குழந்தைகளின் பெற்றோர் உறவினர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட தொடர்பில் இருந்தவர்கள் மூலம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறும் மருத்துவர்கள் தற்போது வரை குரங்கு அம்மைக்கு தடுப்பூசி எதுவும் இல்லை என்கின்றனர். இருந்தாலும் வைரஸ் தடுப்பு மருந்துகளான டெக்கோ-வைரல்மாட், டீ-பாக்ஸ் ஆகிய மருந்துகள் குரங்கு அம்மைக்காக சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கும் டீ பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications