பிரதமர் மோடியையும் முகம்மது பின் சல்மானையும் ஒப்பிடுவதா? அமெரிக்காவை கடுமையாக சாடிய இந்தியா
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட ரீதியான சலுகை அளிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியையும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானையும் ஒப்பிட்டு அமெரிக்கா கருத்து தெரிவித்ததற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த கருத்து அவசியமற்றது மற்றும் தேவையற்றது என்றும் உண்மை நிலைக்கு மாறானது என்றும் இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்தது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதாக விமர்சித்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் USCIRF அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மோடியின் பெயர் அமெரிக்க விசா தடை பட்டியலில் இணைக்கப்பட்டது.

சட்டரீதியிலான விலக்குகளை
அதன்பிறகு இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு இந்த தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது. இந்த நிலையில், சவுதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்களை விமர்சித்ததற்காக ஜமோல் கசோக்கி என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில் சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் பெயரும் அடிபட்டு வருகிறது. அமெரிக்கா கூட இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா தற்போது சவுதி பட்டத்து இளவரசருக்கு சட்டரீதியிலான விலக்குகளை( immunity) அளித்து இருக்கிறது.

அடுக்கடுக்கான கேள்விகள்
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேலிடம் அமெரிக்க பத்திரிகையாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த வேதாந்த் படேல் கூறுகையில், ''சவுதி அரேபியாவின் அரச தலைவராக முகம்மது பின் சல்மான் புதிய பதவி வழங்கப்பட்டு இருப்பதால் இத்தகைய விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் இதற்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, காங்கோ நாட்டு முன்னாள் அதிபர் லரண்ட் கபிலா மற்றும் ஹைதி முன்னாள் அதிபர் ஜீந்பெர்டாண்ட் அரிஸ்டைட் ஆகியோருக்கும் இதேபோன்ற தடை விலக்கு சலுகை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் பதிலளித்தார்.

தொடர்பு இல்லாதது, பொருத்தமற்றது
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரின் இந்த கருத்துக்குத்தான் இந்திய வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, பிரதமர் மோடிக்கு 2014 முதல் அளிக்கப்பட்டு இருக்கும் விதிவிலக்கையும் தற்போது சவுதி பட்டத்து இளவரசருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் சட்டரீதியிலான விதிவிலக்கோடு ஒப்பிட்டு பேசியிருப்பது, தொடர்பு இல்லாதது, பொருத்தமற்றது என்று சாடியுள்ளார்.

அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை
மேலும், பிரதமர் மோடி வரும் டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தாக வெளியான தகவல் குறித்தும் பேசிய அரிந்த பக்சி, மத்திய அரசிடம் அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை. பிரதமர் மோடியும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பலமுறை சந்தித்து பேசியிருக்கின்றனர். பாலியில் நடைபெற்ற ஜி 20மாநாட்டின் போது இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. இந்தோனேசியா அதிபருடன் சேர்த்து முத்தரப்பு சந்திப்பும் நடைபெற்றது" என்றார்.

போதிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது
அதேபோல், மதசுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க காங்கிரசின் அப்டேட் செய்யப்பட்ட அறிக்கையை கடுமையாக சாடிய அரிந்தம் பக்சி, "இந்தியாவுக்கு எதிராக பாரபட்சமான மற்றும் தவறான மதிப்பீடுகளை கொண்ட USCIRF- இன் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். உண்மை நிலைகளை தவறாக சித்தரித்து காட்டும் அவர்களின் போக்கு இந்தியாவை பற்றியும் அதன் அரசியல் அமைப்பு மற்றும் பன்முகத்தன்மை, வலுவான ஜனநாயக அமைப்பு குறித்த போதிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications