உலகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - துளிர்க்கும் நம்பிக்கை - இயல்பு நிலை எப்போது
உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,06,298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம்உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,18,49,051 பேராக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்: உலகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சமாக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,18,49,051 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா கொடுந்தொற்று காரணமாக உலக மக்களின் இயக்கம் முற்றிலும் முடங்கிப் போனது. பல நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் அலை ஓய்ந்த பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

2020ஆம் ஆண்டின் இறுதிவரை கொரோனாவின் தாக்கம் பரவலாக இருந்த நிலையில் 2021ஆண்டில் பல நாடுகளில் இரண்டாவது அலை வீசத் தொடங்கியது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியாதான். தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது. உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 8 லட்சத்திற்கு மேல் பதிவானது.
கடந்த மார்ச் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் கடந்த எப்ரல் முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலானது. இதன் காரணமாக 4 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 50ஆயிரமாக குறைந்துள்ளது.
உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 3,06,298 பேராக குறைந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,18,49,051 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 2,94,718 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 16,63,61,756 பேர் மீண்டனர்.
கொரோனாவால் ஒரே நாளில் 5,795 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உலகம் முழுவதும் 3,938,555 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 11,548,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கொரோனா மூன்றாவது அலை வீசும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications