வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் சூட்கேஸில் இருந்த மாட்டுச்சாண வறட்டிகள்.. விமானத்தில் கொண்டு சென்ற இந்திய பயணி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் சென்ற பயணி ஒருவரின் சூட்கேஸில் மாட்டு சாண வறட்டிகள் இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Recommended Video

    மாட்டுச்சாணம், சிறுநீரில் குளிக்கும் குஜராத்திகள்... என்ன காரணம்? | Oneindia Tamil

    இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் மாட்டு சாணம் கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மாட்டு சாணத்தின் மகிமை

    மாட்டு சாணத்தின் மகிமை

    இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் வீடுகளை சுற்றி விஷ பூச்சிகள், கிருமிகள் அண்டாத வகையில் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து வீட்டின் முன்பு தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பயிர்கள் செழித்து வளர நன்கு உதவுவதால் மாட்டு சாணத்தை உரமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர மாட்டு சாணம் சமையல் எரிவாயுவாகவும் பயன்பட்டு வருகிறது. இத்தகைய மதிப்பு மிகுந்த மாட்டு சாணத்தின் தேவை பல்வேறு நாடுகளில் அதிகரிதது விட்டன.

    ஆன்லைனில் விற்பனை

    ஆன்லைனில் விற்பனை

    அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் "cow dung" என்ற பெயரில் மாட்டுச் சாண வறட்டியை விற்று வருகின்றன.பல்வேறு நாடுகளில் மாட்டு சாணத்துக்கு கிராக்கி ஏற்படுவதால் அங்கு இந்தியாவில் இருந்து மாட்டு சாணம் கொண்டு செல்கின்றனர். இப்படி மாட்டு சாணத்தை சூட்கேசில் அடைத்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சூட்கேஸில் மாட்டு சாணம்

    சூட்கேஸில் மாட்டு சாணம்

    அமெரிக்காவின் வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் உடைமைகளை அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டனர். 'ஏர் இந்தியா' விமானத்தில் பயணி ஒருவர் விட்டுச் சென்ற சூட்கேஸை சோதனை செய்தபோது அதில் மாட்டுச் சாண வரட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த சூட்கேஸ் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒரு பயணிக்கு சொந்தமானது தெரியவந்தது.

    அமெரிக்காவில் தடை

    அமெரிக்காவில் தடை

    ஆனால் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு மாட்டு சாண வறட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அதனை அதிகாரிகள் அழித்தனர். கால்நடைகள் மத்தியில் காணப்படும் 'கோமாரி' என்னும் நோய் பரவலை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் மாட்டு சாண வறட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Authorities were shocked to find cow dung dryers in the suitcase of a passenger on a flight from India to the United States
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X