Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'விமானங்களுக்கு ஆபத்தா?'.. பறக்கும் தட்டுக்களுடன் மோதப்போகிறது?.. திகில் கிளப்பும் அமெரிக்க எம்.பி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வரும் ஆண்டுகளில் பறக்கும் தட்டுக்களுடன் மோதி விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கும் என அமெரிக்க எம்.பி டிம் பர்ச்செட் தெரிவித்துள்ளார்.

வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் எப்படி இருப்பார்கள்? என்ற கேள்விகளுக்கு பல ஆண்டுகளாக விடைகள் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

வேற்று கிரகவாசிகள் குறித்த விவாதம் இன்று.. நேற்றல்ல... பல தசாப்தங்களாக நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா?

வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா?

ஆனால், இதற்கு முடிவுதான் எட்டப்படவில்லை. வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? என்பதற்கே உறுதியான சான்றுகள் எதுவும் இதுவரை கிட்டவில்லை. ஆனால், வெளிநாடுகளில் திடீர்.. திடீரென.. பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக செய்திகள் வெளியாகி நமக்குள் ஆர்வத்தை ஊட்டும். இன்னும் சொல்லப்போனால், வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்கள் குறித்த பேச்சுக்கள் 1940 -50 களிலேயே துவங்கி விட்டது. ஹாலிவுட் படங்கள் பலவும் வேற்று கிரகவாசிகள் மற்றும் அவர்களின் பறக்கும் தட்டு ஆகியவற்றை கதைக்களமாக அமைத்து தான் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

பறக்கும் தட்டுக்கள்

பறக்கும் தட்டுக்கள்

குறிப்பாக மேன் இன் பிளக், ஏலியன் vs பிரேட்டர்ஸ், ஏலியன்ஸ் இன் தி அட்டிக் உள்ளிட்ட படங்களை சொல்லலாம். இவை தவிர வேற்றுக் கிரகவாசிகளை கொண்டு பல கற்பனைக் கதைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேற்றுக் கிரகவாசிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல் என்பன போன்ற கதைக்களங்களை கொண்டு வேற்று கிரகவாசிகள் குறித்து அறிந்து கொள்ள மேலும் ஆர்வத்தை தூண்டியிருக்கின்றன. அதேபோல், பல புத்தகங்களில் பறக்கும் தட்டுக்கள் இருந்ததை பார்த்தாகவும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

அமெரிக்கா மறைத்ததா?

அமெரிக்கா மறைத்ததா?

சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் இத்தகைய பேச்சுக்கள் அடிக்கடி எழுந்து வருகின்றன. கொரோனா பெருந்தொற்று சமயத்தின் போது, வேற்று கிரகவாசிகள் இருப்பு உண்மைதான் என்பதற்கு சான்றுகள் கிடைத்ததாகவும், அதை அமெரிக்கா மறைத்ததாகவும் ஒரு தகவல் பரவியது. வேற்று கிரகவாசிகளின் இருப்பு மாற்றும் வாழ்க்கை குறித்து ஆய்வில் ஈடுபட்டதாகவும், வேற்று கிரகவாசிகளின் இருப்பு விவகாரத்தில் அமெரிக்கா உண்மையை மறைப்பதாகவும் மூத்த அதிகாரிகள் சிலர் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகும்

விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகும்

அந்த வகையில் அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிம் பர்ச்செட் வெளியிட்டு இருக்கும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. விமானங்களுக்கு பதிலாக வானில் பறக்கும் தட்டுக்கள் மட்டுமே தென்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று டிம் பர்செட் கூறி திகிலை கிளப்பியுள்ளார். இதுபற்றி மேலும் விளக்கிய டிம் பர்ச்செட், "வரும் ஆண்டுகளில் பறக்கும் தட்டுக்களுடன் மோதி விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வெளிப்படையாக பகிர வேண்டும்

அமெரிக்கா வெளிப்படையாக பகிர வேண்டும்

மேலும் அவர் கூறுகையில், ''ராணுவ தலையீட்டின் மூலம் மட்டுமே வானில் விமானங்கள் பறக்க முடிவதற்கான ஒரே வழியாக அமையும். வேற்றுக் கிரகவாசிகளை எதிர்கொள்ள நாசா பல திட்டங்களை வைத்துள்ளது. எனினும், நாசாவால் வேற்றுக் கிரகவாசிகளையோ அவர்கள் நமது வான்பரப்புக்குள் ஊடுருவதையோ தடுத்து நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. எனவே, பறக்கும் தட்டுக்கள், வேற்று கிரகவாசிகள் குறித்த ஒவ்வொரு தகவலையும் அமெரிக்கா வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+