"இருக்க இடமில்லை.. கார் பார்கிங்கில் தான் தூங்கினேன்!" புலம்பும் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்கின் தாயார்
வாஷிங்டன்: உலக கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் தாயார் மாயே மஸ்க் அவர் குறித்துக் கூறியுள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என பல்வேறு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
சமீபத்தில் ட்விட்டர் தளத்தை வாங்குவதாகவும் அறிவித்து, பின் அதைக் கைவிட்டு விட்டார். இதுவே பெரியளவில் சர்ச்சையைக் கிளம்பி இருந்தது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க் எப்போதுமே சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளைப் பல முறை கூறியுள்ளார். கடந்த 2020இல் அவர் தனது அனைத்து சொத்துகளையும் விற்பது குறித்தும் கூட ஆலோசித்தார். அப்போது பேசிய அவர், "நான் எனது அனைத்து சொத்துகளையும் விற்க உள்ளேன். எனது வீட்டையும் விற்க உள்ளேன். நண்பர்கள் வீடுகளில் இருந்து கொள்ளலாம் என யோசிக்கிறேன்" என்று கூறி இருந்தார்.

தாயார்
இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், அவர் தனது 50 ஆயிரம் டாலர் மதிப்புடைய வீட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டு இருப்பதாகவும் கூட அவர் கூறி இருந்தார். இந்தச் சூழலில் மகனின் வீட்டிற்குச் செல்லும் போது அங்கு என்ன நடக்கும் என்பது குறித்து எலான் மஸ்க்கின் தாயார் மாயே மஸ்க் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்து உள்ளார்.

ஆர்வமில்லை
சமீபத்தில் உலக கோடீஸ்வரரான தனது மகன் எலான் மஸ்கை சந்திக்கச் சென்ற போது, கார் பார்க் செய்யும் இடத்தில் தூங்கியதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "உலக கோடீஸ்வரராக இருந்தாலும் எலான் மஸ்க்கிற்கு சொத்துகள் மீதெல்லாம் பெரியளவில் ஆர்வம் இல்லை. சமீபத்தில் டெக்சாஸிற்கு எஸ்கை காணச் சென்று இருந்தேன்.

பார்கிங்கில் தூங்கினேன்
SpaceX தலைமை அலுவலகம் அங்கு தான் அமைந்து இருந்தது. இதனால் தூங்கக் கூட இடம் இல்லாமல் கார் பார்கிங்கில் தான் தூங்கினேன். ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகே பிரம்மாண்ட வீடுகளை எல்லாம் வைத்திருக்க முடியாதல்லவா! செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்ல வேண்டும் என எனது மகன் ஆய்வு செய்து வருகிறான். ஆனால், எனக்கு அதில் எல்லாம் எனக்குப் பெரிய விருப்பமில்லை.

ஆர்வமில்லை
இதற்காக ஆறு மாதங்கள் ரெடியாகி தனிமையில் இருக்க வேண்டும். அதில் எல்லாம் எனக்குப் பெரியளவில் ஆர்வம் இல்லை. ஆனால், எனது மகன்களுக்கு இதில் ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக அங்குச் செல்வேன்" என்றார். எலான் மஸ்கிந் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மனிதர்களைச் செவ்வாய்க் கிரகத்தில் குடியேற்றம் செய்வது குறித்த ஆய்வுகள் முதன்மையானது ஆகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications