வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்.. டிரம்புக்கு கிடைத்த கடைசி பெஸ்ட் சான்ஸ்.. பிடனுக்காக வரும் ஓபாமா.. செம்ம!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் முக்கியமான மாற்றத்தை உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். டிரம்புக்கு நேருக்கு நேர் விவாத மேடை நிகழ்ச்சி இந்த தேர்தலில் டிரம்ப்பின் பிரசாரத்தின் பாதையை மாற்றுவதற்கான கடைசி, சிறந்த வாய்ப்பாக இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜோ பிடனுக்காக ஒபாமா பிரசாரம் மேற்கொள்வதால் சூடுபிடித்துள்ளது.

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது, ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் இரு தரப்பும் நேரடியான தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் ஆன்லைன் பிரச்சாரங்களை அதிக அளவு செய்து வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால் சீனாவுக்கு சாதகமாக மாறுவார், வெளிநாட்டவருக்கு சாதகமாக மாறுவார் என்று டிரம்ப் பிரச்சாரம் செய்து வருகின்றார்.

டிரம்ப் தீவிர பிரச்சாரம்

டிரம்ப் தீவிர பிரச்சாரம்

மேலும் டிரம்ப், வழக்கம் போல் மண்ணின் மைந்தர் கொள்கையை தீவிரமாக சொல்லியும், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அதற்கு எதிராக இருப்பதாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் பிடனோ, டிரம்ப் ஏற்படுத்தியுள்ள சேதத்தை அடுத்த 4 வருடங்களில் மாற்றுவேன். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு குடியுரிமை அளிப்பேன். வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவேன் என்று பேசிவருகிறார். இரு தரப்பும் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.

மிரட்டும் கொரோனா

மிரட்டும் கொரோனா

பல லட்சம் பேரை பாதித்த கொரோனாவுக்கு மத்தியில், பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், பல்லாயிரம் பேர் வேலை இழப்புக்கு மத்தியில் அதிபராக உள்ள டிரம்ப், மீண்டும் போட்டியிடுவதால் கடும் சிக்கலையும், சவாலையும் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து எதிர்கொண்டு வருகிறார். அவர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் தக்க பதிலடி அளிக்க வேண்டிய நெருக்கடியான நிலையில் டிரம்ப் இருக்கிறார்.

டிரம்ப் பீடன் விவாதம்

டிரம்ப் பீடன் விவாதம்

எனவே விரைவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடன் உள்ளிட்டோர் அமெரிக்க தேர்தல் வழக்கப்படி நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்பார்கள். இந்த விவாதம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். இதுதான் இந்த தேர்தலில் டிரம்ப்பின் பிரச்சாரத்தின் பாதையை மாற்றுவதற்கான கடைசி, சிறந்த வாய்ப்பாக இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது, அந்த பிரச்சாரத்தில் சரியான முறையில் டிரம்ப் பயன்படுத்தினால் அது திருப்பு முனையாக மாறும்.

பின் தங்கிய டிரம்ப்

பின் தங்கிய டிரம்ப்

இதற்கிடையே எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிடம் இருந்து ஊக்கத்தை எதிர்பார்க்கிறார், அவர் பிலடெல்பாவில் பிடனுக்காக தனது முதல் நபர் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இது முக்கிய பிரச்சாரம் ஆகும். பல மாநிலங்களில் தேர்தல்களில் பின்தங்கிய டிரம்ப் செவ்வாயன்று பென்சில்வேனியாவில் பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில், ஒபாமா மேற்கொண்டார்.

 டிரம்ப் செய்யும் பிரசாரம்

டிரம்ப் செய்யும் பிரசாரம்

இதனிடையே பென்சில்வேனியாவின் எரி நகரில் பேசிய டிரம்ப் "உங்களை கஷ்டத்தில் இருந்து மீட்க வந்த டிரம்புக்கும் , உங்களை கவலைக்கு உள்ளாக்கும் பிடெனுக்கும் இடையிலான தேர்தல் இது. "நீங்கள் இது வரை பார்க்காத விருப்பங்களால், பெரும் மனச்சோர்வு அடைவீர்கள். நீங்கள் மனச்சோர்வு, அழிவு மற்றும் விரக்தியை விரும்பினால், ஜோ பிடனுக்கு ஓட்டு போடுங்கள் என்று காரசாரமாக பேசினார்.

English summary
final presidential debate : President Donald Trump is hopping from one must-win stop on the electoral map to the next in the leadup to a final presidential debate that may be his last, best chance to alter the trajectory of the 2020 campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X