Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிஇஓ-ஆக இருந்தாலும் இதான்.. அரசு வேலை தான் பெஸ்ட்.. எலான் மஸ்க், பராக் அகர்வாலை கலாய்த்து மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி இ ஓ) பொறுப்பில் இருந்த பராக் அகர்வாலை அதிராடியாக பணி நீக்கம் செய்து எலான் மஸ்க் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

ட்விட்டர் சமூக வலைத்தல நிறுவனத்தை வாங்கிய கையோடு அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி இ ஓ) பொறுப்பில் இருந்த பராக் அகர்வாலை அதிராடியாக பணி நீக்கம் செய்து எலான் மஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பராக் அகர்வாலோடு மேலும் சில உயர் அதிகாரிகளையும் எலான் மஸ்க் நீக்கி அதிரடி காட்டியிருக்கிறார்.

எலான் மஸ்க் ட்விட்

எலான் மஸ்க் ட்விட்

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குள் நேற்று சின்க் ஒன்றை தூக்கி கொண்டு செல்லும் போதே பல விஷயங்களை சொல்லாமல் சொல்லிவிட்டதாக நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. டிவிட்டரை வாங்கிய கையோடு அடுத்தடுத்து அதிரடியை எலான் மஸ்க் காட்டத்தொடங்கியிருக்கிறார். the bird is freed- என்று ட்விட்டரை முழுமையாக கைப்பற்றிய பிறகு எலான் மஸ்க் பதிவிட்டு இருந்தார்.

சிஇஓ பொறுப்பில் இருந்து விலகல்

சிஇஓ பொறுப்பில் இருந்து விலகல்

அதாவது பறவைக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்ற அர்த்தத்தில் எலான் மஸ்க்கின் பதிவு இருந்தது. ட்விட்டரின் லோகோ நீல நிறத்தில் பறவை வடிவத்தை கொண்டதாகும். இதனால், இதை குறிப்பிட்டு எலான் மஸ்க் இந்த பதிவை போட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. எலான் மஸ்க் குறித்த செய்திகளே இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தின் சி இ ஓ பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டதும் பேசுபொருளாகியுள்ளது.

மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்

மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்

நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை போட்டு சுவாரசியமாக இந்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்திய நெட்டிசன்கள் பராக் அகர்வால் நீக்கப்பட்டது குறித்து அதிகம் தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

அகர்வால் ஸ்வீட்ஸ் கடை

அகர்வால் ஸ்வீட்ஸ் கடை

இன்னொரு நெட்டிசன் நகைச்சுவையாக, ட்விட்டர் தலைமை அலுவலகத்தின் எதிரே அகர்வால் ஸ்வீட்ஸ் கடையை திறந்து வலுவாக வருவார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அகர்வால் ஸ்வீட்ஸ் என்ற பெயரிலான ஸ்வீட்ஸ்கடை புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

அரசு வேலைக்கு முயற்சிக்க போகிறேன்

அரசு வேலைக்கு முயற்சிக்க போகிறேன்

மங்களம் திவாரி என்பவர் தனது ட்விட்டரில், "பிரபல பாலிவுட் நடிகர் அம்ரிஷ் புரி சொல்வது போல சித்தரித்து, நான் அரசு வேலைக்கு முயற்சிக்க போகிறேன். மிகப்பெரும் சமூக ஊடக நிறுவனத்தின் சி இ ஒ என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அரசு வேலையில் மட்டுமே பணி பாதுகாப்பு உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

ஜி ஜின்பிங்கை எலான் மஸ்க் போல

ஜி ஜின்பிங்கை எலான் மஸ்க் போல


அதேபோல், மற்றொரு நெட்டிசன் வெளியிட்டு இருக்கும் பதிவில், கடந்த சில தினங்களுக்கு முன் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசுவதற்கு முயன்ற முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவ் அதிகாரிகளால் உடனடியாக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படார். இந்தக் காட்சிகளை வைத்து ஜி ஜின்பிங்கை எலான் மஸ்க் போலவும் ஹூ ஜின்டாவை பராக் அகர்வால் போலவும் சித்தரித்து மீம்ஸ் வெளியிட்டு இருக்கிறார்.

வேலையை விட்டு நீக்குங்கள்

வேலையை விட்டு நீக்குங்கள்

காமெடி நடிகர் கோவிந்தா நடித்த ஒரு படத்தின் காட்சியில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அவர் அலுலகத்தில் உள்ள அனைவரையும் வேலையை விட்டு நீக்குங்கள்.. இந்த டிபார்ட்மெண்டை மூடுங்கள் என கூறுவார். இந்த காட்சியை வைத்து எலான் மஸ்க்கை ட்ரோல் செய்துள்ளனர்.

வெல்கம் டிரம்ப்

வெல்கம் டிரம்ப்

இன்னொரு நெட்டிசன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் புகைப்படத்தை பதிவிட்டு வெல்கம் டிரம்ப் என்று பதிவிட்டுள்ளார்.

பறவைகளை திறந்துவிடும் எலான் மஸ்க்

பறவைகளை திறந்துவிடும் எலான் மஸ்க்

இன்னொரு நெட்டிசன், காரில் எலான் மஸ்க் இருப்பது போலவும்.. அவருக்கு வெளியே ஒருவர் கூண்டில் அடைத்த பறவைகளை வைத்திருப்பது போலவும்.. பின்னர் எலான் மஸ்க் பறவைகளை ஒவ்வொன்றாக வாங்கி திறந்து விடுவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+