Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால்.. எலான் மஸ்க் போட்ட பரபரப்பு ட்வீட்.. நெட்டிசன்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால் அதற்கான காரணங்களை நீங்கள் அறிந்து கொண்டால் மகிழ்ச்சி என எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க் உலக பணக்காரர்களுள் ஒருவர். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் வரிசையில் ட்விட்டரையும் தன் வசமாக்கி கொண்டவர். ட்விட்டரை இவர் 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளார்.

ட்விட்டரில் நிறைய மாற்றங்களை கொண்டு வரப்போவதாக கூறி வருகிறார். தினமும் ஒரு ட்வீட் போட்டு மெக் டொனால்ட்டை வாங்க போகிறேன், கோக கோலாவில் கோகைனை கலக்க போகிறேன் என்றெல்லாம் ட்வீட் போட்டிருந்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த நிலையில் எலான் மஸ்க் இன்று ஒரு அதிர்ச்சி ட்வீட்டை போட்டுள்ளார். அதில் அவர் " நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால் அதற்கான காரணத்தை நீங்கள் அறிந்து கொண்டால் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். எதற்காக எலான் மஸ்க் இப்படி ஒரு ட்வீட்டை போட்டுள்ளார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ரஷ்ய மொழியில் ட்வீட்

ரஷ்ய மொழியில் ட்வீட்

இந்த ட்வீட்டை போடுவதற்கு முன்னர் ரஷ்ய மொழியில் அந்த நாட்டு அதிகாரி ஒருவரின் உரையாடலை மஸ்க் ட்வீட்டில் பகிர்ந்துள்ளார். அதில் உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார். நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்து கொண்டாலும் நீங்கள்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

உக்ரைனுக்கு உதவி

உக்ரைனுக்கு உதவி

உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்து வருவதால் ரஷ்ய படைகளால் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்கப்பட்டிருக்கலாம். அதனால் மஸ்க் இப்படி ஒரு ட்வீட்டை போட்டிருக்கலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள். ஏற்கெனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைகோள் மூலம் உக்ரைனுக்கு பிராட்பேண்ட் சேவையை மஸ்க் வழங்கியுள்ளார்.

Recommended Video

    Elon Musk-ன் Tweet! Tataவின் EV Plan | Aanees Bits And Bytes | OneIndia Tamil
    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இவரது இந்த ட்வீட் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலர் இவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும் ரஷ்ய மொழி ட்வீட்டில் அந்த அதிகாரி நாசி என எதை குறிப்பிடுகிறார் என்றும் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். லெஜண்ட்களுக்கு இறப்பே இல்லை என நெட்டிசன் ஒருவர் மஸ்கிற்கு கூறியுள்ளார். எலான் மஸ்கின் சேவை இந்த உலகிற்கு தேவை என்கிறார் இன்னொருவர்! உங்கள் டிராமாவை நிறுத்துங்கள், இந்த உலகிற்கும், உக்ரைன் நாட்டு மக்களுக்கும் எப்படி உதவுவது என்பதில் கவனம் செலுத்துங்கள், இல்லாவிட்டால் அமைதியாக இருங்கள் என ஒரு நெட்டிசன் கடிந்து கொண்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+