கல்லூரியில் ஒன்றாக ‛அந்த’ படம் பார்க்கலாமாம்... அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்பும் புதிய படிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று ஆபாசபடங்கள் தொடர்பான படிப்பை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் ஒருபகுதியாக மாணவர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக ஆபாச படங்களை பார்க்க வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஒவ்வொரு நாடுகளிலும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்கள் மாறி உள்ளன. அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றுவது இல்லை.

மேலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு மாற்றம் செய்யும்போது பழைய பாடங்கள் நீக்கப்பட்டு புதிய பாடங்கள் சேர்க்கப்படும்.

அமெரிக்காவில் சர்ச்சை

அமெரிக்காவில் சர்ச்சை

இவ்வாறு புதிய பாடங்கள் சேர்க்கும்போது சர்ச்சைகளும் வெடிக்கும். அந்த வகையில் தான் அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் புதிய அறிமுகம் செய்யப்பட உள்ள படிப்பு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அது எந்த கல்லூரி, எந்த வகையான பாடத்திட்டத்தை சேர்த்ததால் சர்ச்சை வெடித்துள்ளது என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:

வகுப்பறையில் ஆபாச படம்

வகுப்பறையில் ஆபாச படம்

அமெரிக்காவின் உட்டாவில் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் புதிதாக பாலியல் கல்வி தொடர்பான படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து ‛பிலிம் 300 போர்ன்' என்ற தலைப்பில் கல்லூரியின் இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில் படிப்பின் ஒருபகுதியாக வகுப்பறையில் மாணவர்கள் ஒன்றாக ஆபாச படங்கள் பார்க்க வேண்டும் என கூறப்படுகிறது.

ஏற்றத்தாழ்வுகளை மாற்றும்

ஏற்றத்தாழ்வுகளை மாற்றும்

மேலும் அந்த பதிவில், "ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கும் கால்பந்து போட்டியை விட இது ஆர்வமானது. இது கவர்ச்சிகரமான நுண்ணறிவை வழங்குகிறது. இந்த அணுகுமுறை என்பது பாலியல் தொடர்பான ஏற்றத்தாழ்வுகளை மாற்றும். மாணவர்கள் ஆபாசப் படங்களை ஒன்றாக பார்ப்பார்கள். இனம், பாலினம் அடிப்படையில் விவாதித்து புரிதலை பெறுவார்கள். இது பாலியல் மற்றும் பாலின விதிமுறைகளை சவால் செய்யும் வகையில் உள்ளது'' என கூறப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

சமூக பிரச்சனைகளில் பகுப்பாய்வு

சமூக பிரச்சனைகளில் பகுப்பாய்வு

இதையடுத்து கல்லூரியின் இணையதளத்தில் இருந்த விளக்கப்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படிப்பை கல்லூரி நிர்வாகம் நீக்கம் செய்யவில்லை எனவும், 2022-2023ம் கல்வியாண்டில் இது மாணவர்களிடம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் எப்போதாவது இதுபோன்ற வித்தியாசமான படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக புதிய படிப்புகள் அறிமுகம் செய்ய முடியவில்லை. தற்போது மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்கள் சமூக பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்யலாம் என கல்லூரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+