ஈரான் பயன்படுத்திய ’கில் ஸ்விட்ச்’ சீனா, ரஷ்யா உதவியா? டிரம்ப் திட்டத்திற்கு செக் வைத்த கமேனி
வாஷிங்டன்: ஈரானில் அதிபர் கமேனிக்கு எதிராக போராட்டம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்ட நிலையில், செயற்கை கோள் அடிப்படையில் இணைய சேவை வழங்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் இணைய சேவையை அளிக்க திட்டமிட்டு இருப்பதாக டிரம்ப் கூறிய நிலையில், இதற்கும் செக் வைக்கும் வகையில் ஒரு விஷயத்தை ஈரான் செய்துள்ளது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது வன்முறை ஏற்பட்டது.

ஈரானில் 12வது நாளாக போராட்டம்
போராட்ட வன்முறையின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 496 பொதுமக்களும் 48 பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு இணைய சேவை, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், ஈரானில் என்ன நடக்கிறது என்ற முழுமையான தகவல்களை அறிவதில் தாமதம் ஏற்படுகிறது.
கடந்த 2 வார போராட்டங்களில் 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12வது நாளாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு அடக்குமுறைகளை கமேனி ஆட்சி நிர்வாகம் கொண்டு வருகிறது.
இணைய சேவை முடக்கம்
ஈரானில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது. ஒட்டு மொத்த நாட்டிலும் இணைய சேவை முடக்கப்பட்டதால் தவித்த ஈரானிய மக்கள் ஆப்ஷன் பி யாக எலான் மஸ்கின் ஸ்டார் லிங் இணைய சேவையை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஈரானில் என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல்களை ஸ்டார்லிங் இணைய சேவை பயன்படுத்தி ஈரானிய மக்கள் வெளி உலக்குக்கு அனுப்பி வந்தனர்.
ஆனால், தற்போது ஸ்டார்லிங் இணைய சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் 30 சதவீதம் அளவுக்கு ஸ்டார்லிங் இணைய சேவை முடங்கிய நிலையில், தற்போது 80 சதவீதம் அளவிற்கு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கில் ஸ்விட்ச் ஜாமர்
செயற்கைகோள் அடிப்படையிலான இணையசேவைதானே இது எப்படி முடங்கும் என்ற கேள்வி எழலாம். இங்குதான் ஈரான், எலான் மஸ்க்கிற்கே தண்ணி காட்டியதாக சொல்லப்படுகிறது. அதாவது, கில் ஸ்விட்ச் எனப்படும் ஜாமரை ஆன் செய்து ஸ்டார்லிங் சேவை பெறுவதில் இடையூறு ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
மிகவும் விலை உயர்ந்த மற்றும் ராணுவத் தர ஜாமிங் கருவிகளை பயன்படுத்தி இணைய சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ஈரானிடம் இதுபோன்ற கருவிகள் இல்லை. எனவே, ரஷ்யா அல்லது சீனா இதை விநியோகித்து இருக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லபடுகிறது.
ஈரான் வரம்பை மீறிவிட்டது
ஈரானில் இணைய சேவை பாதிக்கப்பட்டு இருப்பதால், அங்கு இணைய சேவை வழங்குவதற்காக எலான் மஸ்கிடம் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த சூழலில்தான் ஈரானில் ஸ்டார்லிங் இணையசேவையே முடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஈரான் விவகாரத்தில் விரைவில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் அண்மையில் எச்சரித்து இருந்தார்.
டிரம்ப் இது தொடர்பாக கூறுகையில், ஈரான் வரம்பை மீறிவிட்டதாக நினைக்கிறேன். அவர்கள் அவ்வாறு செய்தால், இதற்கு முன்பு ஒருபோதும் தாக்கப்படாத அளவில் நாங்கள் அவர்களைத் தாக்குவோம். கொல்லப்படக்கூடாத சிலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தலைவர்களா அல்லது வன்முறை மூலம் ஆட்சி செய்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு
ஆனால் நாங்களும் ராணுவமும் இதை மிகவும் தீவிரமாகப் பார்க்கிறோம், நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுப்போம். அவர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய எனது நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்காவினால் தாக்கப்படுவதில் அவர்கள் சோர்வடைந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ராணுவ நடவடிக்கை குறித்த அவர்களது அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர், மேலும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
-
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்!












Click it and Unblock the Notifications