தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு
வாஷிங்டன்: "உலக நாடுகளே... உங்கள் கப்பல்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்!" - கிட்டத்தட்ட இப்படி ஒரு சரணாகதி அறிக்கையைத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார். பல தசாப்தங்களாக உலகப் பெருங்கடல்களின் ஒற்றை ராஜாங்கமாக வலம் வந்த அமெரிக்காவுக்கு, 2026-ல் ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவு உலக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

டிரம்ப் பதிவிட்ட அந்த 'அதிர்ச்சி' வரிகள்!
ஈரானின் ராணுவக் கட்டமைப்பை 100% அழித்துவிட்டதாக டிரம்ப் தம்பட்டம் அடித்தாலும், யதார்த்தம் வேறாக இருக்கிறது. தனது சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது:
"ஈரான் எவ்வளவுதான் மோசமாகத் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களால் ஓரிரு ட்ரோன்களையோ அல்லது கண்ணிவெடிகளையோ ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏவ முடிகிறது. சீனா, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகள் இனி தங்கள் சொந்தப் போர்க்கப்பல்களை இங்கே அனுப்ப வேண்டும். அமெரிக்கா தொடர்ந்து கடற்கரை ஓரங்களில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தும். எப்படியாவது விரைவில் இந்த வழியைத் திறப்போம்!"
என்ன நடக்கிறது ஹோர்முஸ் ஜலசந்தியில்?
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான வழித்தடம் இது. இதனை மூடுவதாக ஈரான் விடுத்த மிரட்டலை முறியடிக்க முடியாமல் அமெரிக்கா திணறி வருவது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'MAGA' (Make America Great Again) என்று முழக்கமிடும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு, இது ஒரு மிகப்பெரிய 'வேக்-அப் கால்' (Wake-up call).
ஈரானை முழுமையாக ஒடுக்கிவிட்டதாகச் சொல்லிக்கொண்டே, "எங்களால் மட்டும் இதைச் சமாளிக்க முடியாது, மற்ற நாடுகளும் வாருங்கள்" என டிரம்ப் அழைப்பு விடுப்பது அமெரிக்காவின் பலவீனத்தையே காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மத்திய கிழக்கில் போர்ப் மேகங்கள் கருத்துச் சூழ்ந்துள்ள நிலையில், 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) இப்போது உலகப் பொருளாதாரத்தின் கழுத்தை நெரிக்கும் ஒரு மரணக் கயிறாக மாறியிருக்கிறது. ஈரானின் 16 கண்ணிவெடி கப்பல்களை அமெரிக்கா அடித்துத் துவம்சம் செய்துள்ள செய்தி, ஒரு பெரிய விபரீதத்தின் ஆரம்பப்புள்ளி என்கிறார்கள் சர்வ்தேச அரசியல் நோக்கர்கள்.
என்ன நடக்கிறது ஹார்முஸ் ஜலசந்தியில்?
உலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு செல்லும் மிகக்குறுகிய பாதை இது. வெறும் 33 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்தப் பாதையை அடைத்தால், ஒட்டுமொத்த உலகமும் இருளில் மூழ்கும் என்பது ஈரானின் கணக்கு. இதற்காக ஈரான் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் - கடல் கண்ணிவெடிகள் (Naval Mines).
ஏன் இந்த கண்ணிவெடிகள் ஆபத்தானவை?
ஈரான் தனது அதிவேகப் படகுகள் மூலம் இந்தப் பாதையில் ரகசியமாக கண்ணிவெடிகளைத் தூவி வருகிறது.
கண்ணுக்குத் தெரியாத எமன்: இவை கடலுக்கு அடியில் 60 மீட்டர் ஆழத்தில் பதுங்கியிருக்கும். ஒரு பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் இதன் மேலே செல்லும்போது, அதன் காந்த விசை (Magnetic Signature) அல்லது அழுத்தத்தை உணர்ந்து தானாகவே வெடிக்கும்.
மீட்பது கடினம்: ஒருமுறை கண்ணிவெடி தூவப்பட்டால், அதை அகற்றுவது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதற்குச் சமம். அமெரிக்க கடற்படை ஒரு பாதையைச் சுத்தம் செய்தாலும், அடுத்த ஒரு மணிநேரத்தில் ஈரான் மீண்டும் அங்கு புதிய கண்ணிவெடிகளைத் தூவிவிட முடியும்.
முடிவுக்கு வருகிறதா அமெரிக்க சாம்ராஜ்யம்?
ஒரு காலத்தில் உலகையே தன் கைக்குள் வைத்திருந்த 'குளோபல் ஹெஜிமன்' (Global Hegemon) அந்தஸ்தை அமெரிக்கா மெல்ல மெல்ல இழந்து வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
அவமானம்: அதிநவீன ஆயுதங்கள் இருந்தும் ஒரு சிறிய பிராந்திய சக்தியை கட்டுப்படுத்த முடியாத நிலை.
தடுமாற்றம்: தனது மேற்கு அரைக்கோளப் (Western Hemisphere) பாதுகாப்பிற்கே உத்தரவாதம் இல்லாத சூழலுக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது.
மாறும் அரசியல்: 2026-ன் இந்த நிகழ்வு, உலக அதிகார மையத்தை ஆசியாவை நோக்கி நகர்த்தும் ஒரு முக்கிய காரணியாக மாறக்கூடும்.
வரலாறு மாறுகிறது! அமெரிக்காவின் இந்த 'பவர்லெஸ்' நிலை, வரும் நாட்களில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை முதல் உலகப் பாதுகாப்பு வரை பல மாற்றங்களை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல்












Click it and Unblock the Notifications