இது விடாத போல இருக்கே! பைடனையும் வைத்து செய்த டெலிபிராம்டர்.. அதிபர் மாளிகை தந்த வினோத விளக்கம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடியோ இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இதற்கு வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இப்போது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். இவர் கடந்த 2019 தேர்தலில் டிரம்பை வீழ்த்தி அந்நாட்டின் 46ஆவது அதிபராகப் பொறுப்பு ஏற்றார்.
இருப்பினும் 79 வயதாகும் ஜோ பைடனின் உடல்நிலை சார்ந்த கேள்விகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளது.

கருக்கலைப்பு
அதுபோன்ற ஒரு சம்பவத்தில் தான் இப்போது அவர் மீண்டும் சிக்கி உள்ளார். கருக்கலைப்பு சட்ட விரோதமானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவைப் பிறப்பித்து இருந்தது. இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. இந்த விவகாரத்தில் பைடன் அரசு தலையிட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து கருக்கலைப்பு தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றில் அதிபர் பைடன் சமீபத்தில் கையெழுத்திட்டார்.

சொதப்பிய பைடன்
அப்போது நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது தான், இந்த தவறு நடந்துள்ளது. பொதுவாகத் தலைவர்களின் உரை டெலிபிராம்டரில் தான் இருக்கும். அதைப் பார்த்துத் தான் தலைவர்கள் படிப்பார்கள். அப்படி தான் ஜோ பைடனும் தனது உரையை வாசித்து வந்தார். அப்போது ஒரு குறிப்பிட்ட வரியை மீண்டும் சொல்ல வேண்டும் என்பதற்காக "என்ட் ஆஃப் கோட், ரிப்பீட் தி லைன்" என்று இருந்தது. ஆனால், இதையும் படிக்க வேண்டும் என நினைத்து அதையும் சேர்த்து பைடன் படித்துவிட்டார்.

நெட்டிசன்கள்
இதனை இணையத்தில் பலரும் வைத்துச் செய்துவிட்டனர். அமெரிக்க அதிபர் பைடன் தெளிவாக முடிவு எடுக்கும் நிலையில் இல்லை என்றும் அவரது உடல்நிலை எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதையும் இதைக் காட்டுவதாகப் பலரும் விமர்சித்தனர். பைடனுக்கு வயது அதிகம் என்பதால் அவர் மீது தொடர்ச்சியாக இதுபோன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

விளக்கம்
இந்தச் சூழலில் இது தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பைடன் ரிப்பீட் தி லைன் என்று கூறவில்லை என்றும் லெட் மீ ரிப்பீட் தி லைன் என்றே கூறியதாக வெள்ளை மாளிகையின் உதவி செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது பெண்களின் உரிமை தொடர்பான தனது கருத்தை மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவர், இதை மீண்டும் திரும்பச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றே கூறியதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது
Recommended Video

சாடல்
இருப்பினும், வெள்ளை மாளிகையின் இந்த விளக்கத்தை யாரும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அதிபர் பைடன் டெலிபிராம்படரை கஷ்டப்பட்டுப் பார்த்துப் படிப்பது அந்த வீடியோவில் தெளிவாக உள்ளது. இதேபோலத் தான் சமீபத்தில் ஜோ பைடன், சைக்கிள் பயணத்தின் போது தவறி விழுந்து இருந்தார். அதேபோல விமான படிக்கட்டிலும் கூட கால் இடறி விழுந்துள்ளார். இதெல்லாம் அவரது உடல்நிலை சரியாக இல்லை என்பதைக் காட்டும் வகையிலேயே உள்ளதாகக் குடியரசு கட்சியினர் கூறி வருகின்றனர்.
-
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications