வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்.. வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு.. வெல்லப்போவது யார்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இன்று நடந்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் அமெரிக்கர்கள் ஓட்டுப்போட்டுள்ளனர். இதனால் இந்த தேர்தலில் வெல்லப்போவது ட்ரம்பா அல்லது ஜோ பிடனா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர், இது இந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்பு நடந்த மிக பெரிய வாக்குப்பதிவு ஆகும். இந்த தேர்தலில் மொத்தம் சுமார் 239 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். மெயில்-இன் வாக்குச்சீட்டுகள் சில மாநிலங்களில் கணக்கிட நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம் என்பதால் இன்றைய வாக்கெடுப்பு முடிந்த சில மணிநேரங்களில் வெற்றியாளர் யார் என்பதை அறிவிக்க முடியாது.

nearly 100 million people have already cast their ballots in early voting in us elections

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெளியிட்ட ட்வீட் பதிவில், "2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில், பராக் ஒபாமாவுடன் இந்த நாட்டை வழிநடத்த உதவுவதற்காக நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்தீர்கள். இன்று, நான் மீண்டும் உங்கள் நம்பிக்கையை கேட்கிறேன் - இந்த முறை, கமலா ஹாரிஸ் உடன் இணைந்து இந்த தேசத்தின் ஆத்மாவை நாங்கள் சரி செய்வோம். - நாங்கள் உங்களை மோசமான நிலைக்கு தள்ள மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

தேர்தல் இன்று நடைபெறறு வரும் நிலையில் முன்னதாக நேற்று தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று, வட கரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய நான்கு மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.

ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்தியா.. டிரம்ப் மகன் வெளியிட்டஉலக மேப். ஷாக்!

செவ்வாய்க்கிழமை, உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு) வாக்குப்பதிவு தொடங்கியது. அமெரிக்க நேரப்படி இரவு 9 மணிக்கு முன்பு வாக்குப்பதிவு முடிகிறது. அதாவது இந்திய நேரப்படி காலை 7.30 மணி அளவில் அமெரிக்கா வாக்குப்பதிவு நிறைவு பெறும். இந்தியாவிற்கும் அமெரிக்காவில் உள்ள நகரங்களும் இடையே 10½ முதல் 13½ மணிநேரம் நேர வித்தியாசம் உள்ளது.

புளோரிடா பல்கலைக்கழகத்தின் கணக்குப்படி அமெரிக்க தேர்தலில் , 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக, வாக்கு எண்ணிக்கை அதிக நேரம் ஆகலாம், ஏனெனில் சில மாநிலங்கள் வாக்குப்பதிவு நாள் வரை வாக்குச்சீட்டு பெட்டியை திறக்காது என்பதால் முடிவுகள் வெளியாக நீண்ட நாட்கள் ஆகலாம். வெற்றி பெறுபவர் 20ம் தேதி அதிபராக பதவி ஏற்பார்.

English summary
Amidst a resurgent COVID-19 pandemic, nearly 100 million people have already cast their ballots in early voting, putting the country on course for its highest turnout in a century.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X