வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிசயம்! ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் பல கிரகங்கள்.. கூட வந்து ஒட்டிக்கொண்ட நிலவு! மிஸ் பண்ணாதீங்க

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அரிதான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாக ஐந்து கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்தது.

இந்த பிரபஞ்சம் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக உள்ளது. ஒவ்வொரு நிமிடமும் பிரபஞ்சம் ஏகப்பட்ட மாற்றங்களும் அதிசயங்களும் நடந்து வருகிறது.

12 டூ 7.. அதுவும் வெறும் 3 மணி நேரத்தில்.. வெலவெலத்து போன ஓபிஎஸ்.. லபக்கென பிடித்த எடப்பாடி! போச்சே! 12 டூ 7.. அதுவும் வெறும் 3 மணி நேரத்தில்.. வெலவெலத்து போன ஓபிஎஸ்.. லபக்கென பிடித்த எடப்பாடி! போச்சே!

வேற்று கிரக வாசிகளைத் தொடர்பு கொள்ள முயற்சிகள் ஒரு புறம் நடைபெறுகிறது என்றால், இயற்கையாகவே நிகழும் நிகழ்வுகள் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

 5 கிரகங்கள்

5 கிரகங்கள்

இதனிடையே அரிதான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாக நேற்று ஐந்து கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்தது. புதன், வீனஸ், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இருந்தன. இதன் மூலம் பூமியில் இருந்து நாம் பார்க்கும் போது, வானில் ஒரே நேரத்தில் நேர் கோட்டில் ஐந்து கிரகங்கள் மற்றும் நிலாவைப் பார்க்கக் கூடிய தனித்துவமான வாய்ப்பு அமைந்தது.

 ஒரே நேர்கோடு

ஒரே நேர்கோடு


இது போன்ற அரிய நிகழ்வு 2040ஆம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் நிகழாது. முன்னதாக கடைசியாக ஐந்து கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நிகழ்வு கடந்த 2004இல் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் முதலில் புதன் மற்றும் வீனஸ் உள்ளது. அதன் பின்னர் நிலவும், அதைத் தொடர்ந்து செவ்வாய், வியாழன் மற்றும் சனி கிரகங்கள் உள்ளது.

 எப்படி

எப்படி

நமது கிரகங்கள் அனைத்தும் சூரியன் என்ற ஒரே நட்சத்திரத்தைச் சுற்றியே வருகிறது. எனவே, ஒரு கட்டத்தில் பல கிரகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகத் தோன்றும் நிகழ்வு சில நேரங்களில் நடக்கும். பூமியில் இருந்து பார்க்கும் போது, அவை ஒரே நேர்கோட்டில் இருப்பது போல தோன்றும். இருப்பினும், அவை தனித்துவமான சுற்றுப்பாதையில் பல பில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவிலேயே சுற்றி வருகிறது.

 நிலவு

நிலவு

முதலில் 5 கிரகங்கள் மட்டுமே ஒரே நேர்கோட்டில் வரும் எனக் கணிக்கப்பட்டது. இடையே நமது துணைக்கோளான நிலவும் வந்த நிலையில், பார்க்கவே இது ஒரு அதிசயமான காட்சியைப் போலத் தோன்றியது. இதைப் பூமியில் பல பகுதிகளில் இருந்தும் நேரடியாகப் பார்க்க முடிந்தது.

 அதிசயம்

அதிசயம்

இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதை அறிவியல் அதிசயம் என்றே வானியலாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இன்றும் மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் இந்த நிகழ்வைப் பார்க்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Rarest celestial event as five planets will formed rare conjunction in the skies: (ஒரே நேர்கோட்டில் நின்ற 5 கிரகங்கள்) Mercury, Venus, Mars, Jupiter, and Saturn aligned together.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X