வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ்க்கு முதல் தடுப்பூசி.. பரிசோதனையை தொடங்கியது அமெரிக்கா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: புதிய கொரோனா வைரஸிற்கான பரிசோதனை தடுப்பூசியை பயன்படுத்தி மனிதர்களுக்கு முதல் சோதனை திங்கள்கிழமை தொடங்கியது என்று அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனாவுக்கு தடுப்பூசி.... அமெரிக்கா இன்று பரிசோதனை

    இப்போது உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி பாதுகாப்பானதா என்பதைக் கண்டுபிடிப்பதே இந்த முதல் தொகுப்பின் முக்கிய குறிக்கோள் என்றும் அது எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை பின்னர் ஆய்வு தீர்மானிக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    மாடர்னா என்ற அமெரிக்க நிறுவனம் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. சியாட்டிலிலுள்ள கைசர் நிரந்தர வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனைக்கு அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் நிதியுதவி செய்து வருகின்றன.

    கொரோனா: டெல்லியில் 50 பேருக்கு மேல் ஒன்று கூட தடை- ஷாஹின் பாக் போராட்டத்துக்கு நெருக்கடி கொரோனா: டெல்லியில் 50 பேருக்கு மேல் ஒன்று கூட தடை- ஷாஹின் பாக் போராட்டத்துக்கு நெருக்கடி

    தன்னார்வலர்களுக்கு சோதனை

    தன்னார்வலர்களுக்கு சோதனை

    எந்தவொரு தடுப்பூசியையும் முழுமையாக சரிபார்க்க ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று பொது சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் திங்கள் முதல் தடுப்பூசியை போட்டு தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சி தொடங்கி உள்ளது என அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி பௌசி தெரிவித்துள்ளார்.

    வழிகோலிய சார்ஸ் வைரஸ்

    வழிகோலிய சார்ஸ் வைரஸ்

    கொரோனா வைரஸ்க்கு சாத்தியமான தடுப்பூசி இவ்வளவு விரைவாக உருவாக்க காரணம் ஏற்கனவே கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களான SARS மற்றும் MERS போன்ற வைரஸ்களை பற்றி ஏற்கனவே அறிந்தவற்றை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியது முக்கிய காரணம் என்கிறார்கள். தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் விரைவான முன்னேற்றம் இருந்தபோதிலும், தடுப்பூசி வைரஸுக்கு எதிராக பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டாலும், குறைந்தது ஒரு வருடத்திற்கு அது மக்களுக்கு கிடைக்காது.

    ஏன் சியாட்டிலில் சோதனை

    ஏன் சியாட்டிலில் சோதனை

    அமெரிக்காவின் சியாட்டிலில் பரிசோதனை முயற்சி நடைபெறுவதற்கு காரணம் கொரோனா வைரஸ் வெடிப்பு வாஷிங்டன் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இன்று வரை 690 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அங்குதான் தன்னார்வலர்களுக்கு பரிசோதனை முயற்சியை அமெரிக்கா திங்கள் முதல் தொடங்கி உள்ளது.

    9படி நிலைகள்

    9படி நிலைகள்

    தடுப்பூசி ஏன் சந்தைக்கு உடனே வராது என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. ஏனெனில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தடுப்பூசிகளை தயாரிக்க மரபணு பொருள் - மெசஞ்சர் ஆர்.என்.ஏ - ஐப் பயன்படுத்துகிறது. இதன்படி மருந்து கண்டுபிடித்திருப்பதால , பல சுவாச நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை அறிய 9 படிநிலைகளை ஆராய்ச்சிகள் கடக்க வேண்டும். ஆனால் இந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட எந்த தடுப்பூசியும் இதுவரை சந்தையை எட்டவில்லை.

    ஆர்என்ஏ அணுகுமுறை

    ஆர்என்ஏ அணுகுமுறை

    ஆர்.என்.ஏ அணுகுமுறை மிக விரைவாக தடுப்பூசியை உருவாக்க முடியும் என்பதால் அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் நிறுவனம் மாடர்னாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்று நிறுவனத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் பார்னி கிரஹாம் தெரிவித்தார்.

    English summary
    The first testing in humans of an experimental vaccine Made by Moderna Begins in Seattle for the new coronavirus began on Monday/
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X