ஆப்கன் தீவிரவாதிகளின் புகலிடமாக கூடாது- ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்! ரஷ்யா, சீனா புறக்கணிப்பு
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க கூடாது, எந்த ஒரு நாட்டுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
Recommended Video
ஐநா பாதுகாப்பு கவுன்சில் குழுவின் தற்போதைய தலைவராக இந்தியா இருந்து வரும் நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆப்கனிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறிய நிலையில், ஐ.நா. மூலமாக ஆப்கனுக்கு அழுத்தம் தரும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

எந்த நாடுகள்
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்மொழிந்தன. 13 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன. அதே நேரம், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நிரந்தர உறுப்பினர்கள் வாக்களிப்பை புறக்கணித்தன.

புகலிடம் கூடாது
இந்த தீர்மானத்தில், எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்துவதற்காக அல்லது தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது, தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க ராணுவம்
ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தாலிபான்கள் கைப்பற்றினர் இதையடுத்து பல நாட்டு மக்களையும் அவரவர் நாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வந்தது.

ஐநா மூலம் உதவி
இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் அமெரிக்க ராணுவத்தின் கடைசி வீரரும் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து கிளம்பி தங்கள் தாயகம் சென்று விட்டார். இந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் வெளியிட்டிருந்தது. அமெரிக்கா வெளியேறி விட்டாலும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் என்று அந்த நாடு உறுதி அளித்தது. இந்த நிலையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications