வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடந்த 10 ஆண்டின் பிரசித்தி பெற்ற ஆங்கில வார்த்தை எது? அமெரிக்க மொழி வல்லுநர்கள் அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்த தசாப்தத்தின் (கடந்த 10 ஆண்டுகள்) பிரசித்தி, பெற்ற வார்த்தை எது என்பதை தேர்வு செய்துள்ளது American Dialect Society.

அமெரிக்கன் டையலெக்ட் சொசைட்டி என்பது அமெரிக்க மொழியியலாளர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். 19ம் நூற்றாண்டிலேயே, உருவானது இந்த அமைப்பு. மொழியியல் வல்லுநர்கள் இணைந்து, கடந்த பத்தாண்டுகளில் அதிக பிரசித்தி பெற்ற வார்த்தை எது என்பதை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.

மீடூ, மீம், ஓகே பூமர் போன்ற நவ காலத்தின் பல புதிய வார்த்தைகள் இந்த போட்டியில் பங்கேற்க வைக்கப்பட்ட வார்த்தைகள். ஆனால், எந்த வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

நிர்வாண படங்கள்.. காட்டு தீ அணைப்பு நிதிக்காக.. மாடல் அழகியின் அசகாய செயல்.. குவியும் பாராட்டு! நிர்வாண படங்கள்.. காட்டு தீ அணைப்பு நிதிக்காக.. மாடல் அழகியின் அசகாய செயல்.. குவியும் பாராட்டு!

இதுதான் அந்த வார்த்தை

இதுதான் அந்த வார்த்தை

நாம் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி பழகிய they (அவர்கள்) என்ற வார்த்தைதான், அமெரிக்க மொழியியலாளர்களால், இந்த தசாப்தத்தின் பிரசித்தி பெற்ற, தாக்கத்தை ஏற்படுத்திய வார்த்தையாக அதிகம் பேரால் வாக்களிக்கப்பட்ட வார்த்தையாகும். இதற்கு காரணம் இருக்கிறதுங்க.

காரணம் என்ன?

காரணம் என்ன?

They என்ற வார்த்தை, அமெரிக்கன் டையலெக்ட் சொசைட்டி வாக்கெடுப்பு படி, 2010 முதல் 2020 வரையிலான பிரசித்தி பெற்ற வார்த்தையாக தசாப்தத்தின் சக்தி மிக்க வார்த்தையாக தேரந்தெடுக்கப்பட்டதோடு, 2015ம் ஆண்டுக்கான வார்த்தை என்ற பட்டத்தை வென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாடகர் சாம் ஸ்மித், 2019 செப்டம்பரில், They என்ற வார்த்தையை பிரபலப்படுத்தினார். "He-அவர் / She-அவள்" என்று ஆண்பால், பெண்பாலை பிரிக்கும் சொற்கள் இனி தேவையில்லை. "They-அவர்கள்" என்ற பொது சொல்லை பயன்படுத்துமாறு, சாம் ஸ்மித் கூறினார்.

பொதுப் பெயர்

பொதுப் பெயர்

இதையடுத்து They வார்த்தை பிரபலமானது. MY என்ற வார்த்தை, அவள் / அவன் போன்றவற்றுக்கு பொதுப் பெயராகும். எனவே, அது 2019 ஆம் ஆண்டிற்கான பிரசித்தி பெற்ற வார்த்தை என தேர்வாகியுள்ளது. நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற கல்வியாளர்கள், பட்டதாரி மாணவர்கள் மற்றும் சொல் ஆர்வலர்களின், வருடாந்திர கூட்டத்தில் இந்த இரண்டு விருதுகளையும் டையலெக்ட் சொசைட்டியின் 350 உறுப்பினர்கள் வாக்களித்து முடிவு செய்தனர்.

மீடூ, மீம்

மீடூ, மீம்

"MeToo" ஹேஷ்டேக் இதில் ஒரு போட்டியாளராக இருந்தது. இது ட்விட்டரில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை. பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை, சுட்டுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதேபோல meme என்ற வார்த்தையும் போட்டியில் இடம் பெற்றது.

ஓகே பூமர்

ஓகே பூமர்

2019 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தைக்காக, பரிந்துரைக்கப்பட்டதில் "ஓகே பூமர்" என்ற வார்த்தையும் இருந்தது. இது வயதில் மூத்தவரை பார்த்து இளைஞர்கள் சொல்லக்கூடிய வார்த்தையாகும். 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கன் டையலெக்ட் சொசைட்டி நிறுவப்பட்ட போதிலும், இதற்கு முன்பு 2 வார்த்தைகளை மட்டுமே தசாப்தத்தின் சிறந்த வார்த்தைகளாக அது தேர்வு செய்தது.

1990கள்

1990கள்

1990களில் பிரசித்தி பெற்ற வார்த்தை என WEB தேர்வு செய்யப்பட்டது. இணையதளம் பரவலாக தொடங்கிய காலகட்டம் அது. எனவே வெப் என்ற வார்த்தை உலகமெங்கும் பரவலானது. எனவே, அப்போது அந்த வார்த்தை தேர்வு செய்யப்பட்டது. அதே நேரத்தில் "கூகுள்" 2000களில் சிறந்த சொல்லாக தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The singular term "they" - used as a pronoun for those who identify as non-binary - has been voted word of the decade by US linguists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X