வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா..கிளம்பிட்டாயா! புத்தாண்டில் ட்விட்டர் யூசர்களுக்கு நல்ல செய்தி! கூடவே கெட்ட செய்தியும் இருக்கு!

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான எலான் மஸ்க் ப்ளூ டிக் வசதிக்கு இனி மாதம் 660 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கட்டணம் செலுத்தியவர்களுக்கு கூடுதல் வசதிகள் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில், ட்விட்டர் பயனர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நீண்ட காலமாக ட்விட்டர் பயனாளர்களையும் உலக அளவிலான அரசியல், பொருளாதார பார்வையாளர்களையும் பதட்டத்தில் வைத்திருந்த ட்விட்டர் டீல் முடிந்திருக்கிறது.

ட்விட்டர் நிறுவனம் மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பது இல்லை எனவும் அதனை வாங்கப் போவதாகவும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவரும் உலக அளவில் மிக பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் கூறி இருந்தார்.

வாடகையை கொடுங்க.. ட்விட்டர் நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு.. எலான் மஸ்க்கிற்கு என்னாச்சு? வாடகையை கொடுங்க.. ட்விட்டர் நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு.. எலான் மஸ்க்கிற்கு என்னாச்சு?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இதனால் ட்விட்டரில் கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவது மிகப் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் இப்போது அப்போது என டீல் முடியாமல் இழுபறியாகவே இருந்தது. இதை அடுத்து நீதிமன்ற வழக்கு வரை சென்ற நிலையில் தற்போது ஒருவழியாக ட்விட்டரை வாங்கி இருக்கிறார் எலான் மஸ்க்.

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய கையோடு எலான் மஸ்க் அந்த நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் தொடர்பாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார். அந்நிறுவனம் கைக்கு வந்த உடனேயே ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி பாரக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்ட அதிகாரி விஜயா கட்டே ஆகியோரை அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.

ப்ளூ டிக்

ப்ளூ டிக்

அதோடு ஒட்டுமொத்தமாக நிர்வாக குழுவையும் நீக்கிவிட்டு எலான் மஸ்க்கே நேரடியாக நிர்வாகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலர் பணி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பணியில் இருக்கும் மென்பொறியாளர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறியதோடு, ப்ளு டிக் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் ஷாக் தகவல்களையும் கொடுத்தார்.

நீண்ட ட்வீட்

நீண்ட ட்வீட்

ட்விட்டரில் நீண்ட பதிவுகளை வெளியிடுவது அதன் தனித்தன்மையை பாதிக்கும் என பலரும் எச்சரிக்கை விடுத்ததோடு கட்டணம் செலுத்தும் முடிவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாத எலான் இன்று காலை ட்விட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றினை தெரிவித்திருக்கிறார். அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் ட்விட்டரில் நீண்ட வடிவிலான செய்தியை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

பயனர்கள் அதிர்ச்சி

பயனர்கள் அதிர்ச்சி

ப்ளூ டிக்குக்கு இனி மாதம் எட்டு டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் கட்டணம் செலுத்தியவர்களுக்கு நீண்ட நேர வீடியோ மற்றும் ஆடியோக்களை பதிவிடும் வசதி அறிமுகப்படுத்தப்படும் . ட்விட்டர் பயனாளர்களுக்கு மேலும் பல வசதிகளும் மாற்றங்களும் இருக்கும். இந்த வசதிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ட்வீட்டுகளுக்கு இடையே வலது இடதுபுறம் செல்லும் வகையில் எளிதாக ஸ்வைப் செய்யும் வசதியும் இந்த வார இறுதியில் வெளியிடப்படும்" என எலான் மஸ்க் கூறியிருக்கிறார். இதனால் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர். மேலும் எலானின் இந்த முடிவு ட்விட்டருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமெனவும், அவரது இந்த முடிவினை மறு பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

English summary
Many Twitter users have been shocked when Elon Musk, the world's largest entrepreneur who bought Twitter, has officially announced that they will have to pay 660 per month for the Blue Tick facility and additional facilities will be provided to those who have paid the fee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X