வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெப கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு.. அதிரடியாக டிஸ்மிஸ் செய்த நிறுவனம்..உடனே கோர்டுக்கு போன ஊழியர்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தாங்கள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக இரு ஊழியர்கள் நீதிமன்ற கதவுகளைத் தட்டி உள்ளனர்.

அமெரிக்க நிறுவனங்கள் அவ்வப்போது தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் ஃபர்பாமன்ஸை ஆய்வு செய்யும். மோசமாக பணிபுரியும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையத்தின் குட் நியூஸ் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையத்தின் குட் நியூஸ்

இருப்பினும், சில சமயங்களில் தனிப்பட்ட காரணங்களாகக் கூட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி வேலையில் இருந்து நீக்கப்பட்ட இருவர் தான் இப்போது நீதிமன்ற கதவுகளைத் தட்டி உள்ளனர்.

 கட்டாயம்

கட்டாயம்

மத ரீதியிலான வழிபாட்டுப் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க மறுத்ததற்காக தங்களைப் பணி நீக்கம் செய்ததாகக் கூறி அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். சமமான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஆணையம் மூலம் இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள அரோரா ப்ரோ சர்வீசஸ் நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பாக பணியாளர்கள் மத பிரார்த்தனை அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

 உரிமையாளர் மிரட்டல்

உரிமையாளர் மிரட்டல்

அப்படி பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க மறுத்ததால் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி மெக்கென்சி சாண்டர்ஸ் மற்றும் கட்டுமான மேலாளர் ஜான் மெக்கஹா ஆகியோரை வேலையை விட்டு அந்த நிறுவனம் நீக்கி உள்ளது. உரிமையாளர் இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக நாத்திகரான மெக்கஹா தெரிவித்தார். ஜப கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது என்றும் உரிமையாளர் மிரட்டியதாகக் குறிப்பிட்டார்.

 ஒரு மணி நேரம்

ஒரு மணி நேரம்

அனைவரும் கத்தோலிக்க முறையில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அந்த நிறுவனத்தில் உரிமையாளர் வலியுறுத்தி உள்ளார். ஒரு மணி நேரம் நீடிக்கும் இதுபோன்ற கூட்டங்கள் கடந்த ஜூன் 2020 முதல் அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் கூறப்பட்டு உள்ளது.

 கண்காணித்த உரிமையாளர்

கண்காணித்த உரிமையாளர்

இந்த ஜெப கூட்டங்களில் பைபிள் வாசிப்பு கட்டாயமாக இருந்துள்ளது. அதுவும் ஒவ்வொரு நாளும் அனைத்து ஊழியர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்ய அதன் உரிமையாளரே ரோல் கால் எடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்காதவர்களை உரிமையாளர் கண்டிப்பார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

டிஸ்மிஸ்

டிஸ்மிஸ்

மெக்கஹா முதலில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத போது, அவரது ஊதியதாம் பாதியாக பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. கொஞ்ச நாட்களிலேயே அவரை பணியை விட்டும் நீக்கி உள்ளது அந்த நிறுவனம். அதேபோல மற்றொரு மனுதாரரான சாண்டர்ஸையும் இதே காரணத்திற்காகக் கடந்த ஜனவரி 2021இல் அந்த நிறுவனம் டிஸ்மிஸ் செய்துள்ளது.

 சட்டப்படி தவறு

சட்டப்படி தவறு

இது குறித்து சமமான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஆணையத்தின் வழக்கறிஞர் மெலிண்டா சி டுகாஸ் கூறுகையில், "வேலை செய்யும் இடங்களில் ஊழியர்கள் தங்கள் மத நம்பிக்கைகளைத் தேர்வு செய்யும் உரிமையைச் சட்டம் வழங்குகிறது. பணியிடத்தில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தும் உரிமையாளர்கள், அதில் நம்பிக்கை இல்லாத ஊழியர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. சட்டத்திலேயே இதற்கு இடம் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Two employees were fired for refusing to participate in the Christian prayer: (கிருத்துவ ஜெப கூட்டத்தில் பங்கேற்க மறுத்ததால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்) US company fired employees for not participating in prayer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X