Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்.. கறுப்பின இளைஞரை அடித்துக் கொன்ற போலீஸார்.. அதிர்ச்சி சம்பவம்

சாதாரண போக்குவரத்து விதிமீறல் குற்றத்திற்காக கறுப்பின இளைஞரை போலீஸார் மிருகத்தனமாக தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஒருவரை 6 போலீஸார் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அத்தனைக்கும் அவர் செய்தது கொலை குற்றமோ, பாலியல் குற்றமோ அல்ல. போக்குவரத்து சிக்னலை மீறிச் சென்ற சிறிய குற்றத்திற்காக ஒரு நாயை அடிப்பதை போல போலீஸார் அவரை மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு, எந்த தவறும் செய்யாத கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு என்பவரை போலீஸார் அடித்துக் கொன்ற கொடூர சம்பவத்தை போலவே தற்போதைய சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

அதிகரிக்கும் போலீஸ் அராஜகம்

அதிகரிக்கும் போலீஸ் அராஜகம்

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே போலீஸாரின் அராஜக செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. சட்டத்தை காக்க வேண்டிய அவர்களே, அதை சுக்குநூறாக உடைத்து வருகிறார்கள். கூடவே இனவெறி உணர்வும் அமெரிக்க போலீஸார் மத்தியில் அதிகமாகி உள்ளதாக தெரிகிறது. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு அரங்கேறியது. மினிசோட்டா மாகாணம் மினியோபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட்(46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, ஒரு போலீஸ்காரர், பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் அங்கேயே இறந்தார்.

மீண்டும் நிகழ்ந்த கொடூரம்

மீண்டும் நிகழ்ந்த கொடூரம்

ஜார்ஜ் பிளாய்டு துடிதுடித்து உயிரிழந்த பரிதாப காட்சி, சமூக வலைதளங்களிலும் ஊடங்களிலும் பரவி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் போலீஸாரின் அராஜகத்தை கண்டித்து பெரிய அளவில் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது நடவடிக்கைக்கும் உள்ளானார். இந்நிலையில், அதேபோன்ற ஒரு கொடூர சம்பவம்தான் மீண்டும் அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது.

சிக்னலை மீறியதற்காக..

சிக்னலை மீறியதற்காக..

டென்னெஸ்ஸி மாகாணம் மெம்ஃபிஸ் நகரைச் சேர்ந்தவர் டயர் நிக்கோலஸ் (29). கறுப்பினத்தைச் சேர்ந்தவரான இவர் கடந்த 7-ம் தேதி இரவு தனது தாயாருக்கு மருந்துகள் வாங்குவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிகப்பு சிக்னலை மீறி அவர் சென்றுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த போலீஸார், தங்கள் வாகனத்தில் அவரை துரத்தினர். போலீஸார் வருவதை பார்த்து பயந்து போன டயர் நிக்கோலஸ், உடனடியாக காரை நிறுத்திவிட்டு ஓடத் தொடங்கினார். இதையடுத்து, போலீஸார் அவர் மீது மின்சாரத்தை பாய்ச்சினர். இதில் அவர் மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.

மிருகத்தனமான தாக்குதல்

மிருகத்தனமான தாக்குதல்

பின்னர் அங்கு சென்ற போலீஸார், ஓரளவு சுயநினைவுடன் இருந்த டயர் நிக்கோலஸின் முகத்தில் பூட்ஸ் காலால் சரமாரியாக எட்டி உதைத்தனர். அதன் பிறகும் கோபம் அடங்காத போலீஸார், அவரை சாலையோர சுவற்றில் சாய்ந்தவாறு அமர வைத்தனர். இதையடுத்து, 6 போலீஸாரும் ஒருவர் மாற்றி ஒருவராக அவரது முகத்தில் மூர்க்கத்தனமாக குத்தினர். ஏற்கனவே மின்சாரம் பாய்ச்சிய அதிர்ச்சியில் இருந்த நிக்கோலஸ், போலீஸாரின் அடி தாங்க முடியாமல் 'மாம்', 'மாம்' (அம்மா) என கத்தினார். இதனைத் தொடர்ந்து, போலீஸ்காரர் ஒருவர் அவரை படுக்க வைத்து அவரது நெஞ்சில் முட்டிப்போட்டு நின்றவாறு முகத்தில் பலமாக குத்தினார். இதில் அவரது மூக்கிலும், வாயிலும் இருந்து ரத்தம் ஊற்றியது.

உயிரிழந்த பரிதாபம்

உயிரிழந்த பரிதாபம்


இந்நிலையில், டயர் நிக்கோலஸ் சுயநினைவு இழந்ததை அறிந்த போலீஸார், அவரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் கடந்த 10-ம் தேதி இறந்தார். இந்த சூழலில், நிக்கோலஸை போலீஸார் தாக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸ் உயரதிகாரிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அந்த காட்சிகளை சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவிட்டனர். இது, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதத்தன்மை சிறிதும் இல்லாத அந்த 6 போலீஸாரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+