ஒரே நொடி! தடுமாறி கீழே விழுந்த பைடன்.. பதறி அடித்து ஓடி வந்த போலீசார்! ஆனால் கடைசியில் நடந்த சம்பவம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பைடன் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது டிரெண்ங்கில் உள்ளது.
தற்போது அமெரிக்க அதிபராக உள்ளவர் பைடன். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், கடந்த தேர்தலில் டிரம்பை தோற்கடித்து அதிபரானார்.
அதிபரான போது இவருக்கு பயங்கர மக்கள் ஆதரவு இருந்தது. இருப்பினும், கொரோனா நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பைடனுக்கு அமெரிக்காவில் ஆதரவு மளமளவென குறைந்தது.

குறையும் ஆதரவு
இதனால் தனது ரேட்டிங்கை ஏற்ற அதிபர் பைடன் அவ்வப்போது மக்களை கேஷ்வலாக சந்திக்கும் நிகழ்வுகளையும் மேற்கொண்டு வருவார். அதுபோல மக்களைச் சந்திக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக பைடன் தனது சைக்கிளில் இருந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பைடன்
79 வயதான அதிபர் பைடன் தனது மனைவி ஜில் பைடன் உடன் இணைந்து டெலாவேரில் உள்ள ரெஹோபோத் பீச்சில் அமைந்துள்ள அவர்களது கடற்கரை இல்லத்திற்கு அருகிலுள்ள பூங்காவில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மக்கள் கூடிய நிலையில், அவர்களிடம் பேச பைடன் தனது சைக்கிளை நிறுத்தினார். இருப்பினும், அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

கீழே விழுந்தார்
இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவரை தூக்கிவிடப் பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிச் சென்றனர். இருப்பினும், அதற்குள் பைடனே சமாளித்துக் கொண்டு எழுந்துவிட்டார். அதன் பின்னர் அங்கிருந்த மக்களிடம் பைடன் பேசினார். எதிர்பாராத விதமாகச் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் கீழே விந்துவிட்டதாத அப்போது பைடன் தெரிவித்து இருந்தார். மேலும், இதனால் பைடன் உடல்நிலை எதுவும் பாதிக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் இல்லை
அதிபருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் குடும்பத்தினருடன் நேரத்தைச் செயல்படுவார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கீழே விழுந்த பின்னர், அவரே எழுந்து மக்களிடம் பேசினார். மேலும் காயம் எதுவும் ஏற்படாததால் அதே சைக்கிளில் அவர் திரும்ப சென்றார். 79 வயதான பைடனின் உடல்நிலை குறித்து சில ஆண்டுகளாகவே சந்தேகம் இருக்கிறது.
|
செல்வாக்கு குறையும்
கடந்த 2020இல் தனது நாய்கள் உடன் விளையாடும் போது, பைடன் தனது கால்களை உடைத்துக் கொண்டார். மேலும், விமானத்தில் ஏறும் சமயத்தில் படியில் இருந்து தடுமாறி வீடும் வீடியோக்களும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் அதிபர் பதவியில் உள்ளவர்களின் உடல்நிலை மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்படும். அதிபர் பதவியை மேற்கொள்ளும் அளவுக்கு உடல்நிலை சிறப்பாக உள்ளதாக என்பதை நோக்குவார்கள். பைடன் வரும் 2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் அவரது செல்வாக்கைக் குறைப்பதாகவே அமைகிறது.

ஆலோசனை
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பைடன், "பணவீக்க அழுத்தங்களைக் குறைக்க வேண்டும். இதற்காகச் சீன பொருட்கள் மீதான சில டிரம்ப் காலகட்ட வரிகளைத் தளர்த்துவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பாக விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச உள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.
-
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்!












Click it and Unblock the Notifications